கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால் மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ எச்சரித்துள்ளார். கொரோனா பரவ தொடங்கி இரண்டு வருடங்கள் கடந்து இருந்தாலும் மக்களுக்கு அதன் மேல் உள்ள அச்சம் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் அவ்வப்போது ஏற்படும் உருமாற்றம் தான். அந்தவகையில் கொரோனாவில் இருந்து புதிய வகை Omicron உலக முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றது.
இந்நிலையில் 2022 உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய குட்டெரெஸ் கூறியதாவது, உலகம் முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவது குறித்து வலியுறுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பலரை இழந்து தவிக்கிறோம்.
இந்தநிலை இப்படியே நீடித்தால் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் நிலைக்கு கொண்டு வரும் என்று ஐ.நா தலைவர் எச்சரித்தார்.
ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போடத் தவறினால் புதிய மாறுபாடுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் நடுப்பகுதியில் 70 சதவீதத்திற்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறிய உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த இலக்குகளை உலகம் எங்கும் நெருங்கவில்லை என்றும் குட்டெரெஸ் கவலை தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தைப் பகிர்வதன் மூலம் வளரும் நாடுகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். அப்பொழுது தான் உயிரை பறிக்கும் தொற்றுநோயிலிருந்து ஒரு வழியை கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.