தமிழினப் படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 11 ஆம் ஆண்டு நிகழ்வைக் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் நினைவேந்தியுள்ளனர்.
கடந்த காலத்தில் தமிழர்கள் அதிகம் படுகொலை செய்யப்பட்ட யாழ். அல்லைப்பிட்டியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா படையினரும் புலனாய்வாளர்களும் பார்த்திருக்க கஜேந்திரகுமார் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றியிருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குகொள்ளாமல் தடுப்பதற்கு சிறிலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள போதும். தடைகளையெல்லாம் தகர்த்து அவர்கள் நினைவேந்தலை மேற்கொண்டுள்ளமை சிறிலங்கா அரசை ஆத்திரமடையவைத்துள்ளது.














(எரிமலையின் செய்திப் பிரிவு)