கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் சூழலில், கொரோனா பரவல் தொடங்கிய நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஓரளவு ஆரம்பமாகியுள்ளது.
இரண்டு மாத காலத்துக்கும் மேலாக வெளியுலகத்துடன் எந்தவிதமான போக்குவரத்துத் தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் அங்கு இன்று, சனிக்கிழமை, நள்ளிரவு ஒரு தொடரூந்து வந்தடைந்ததாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நகரில் உள்ளூர் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவை மீண்டும் சிறிய அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.