தனது எழுத்துக்களால் தனித்துவமான தடம் ஒன்றை பதித்த மாமனிதர்  தராக்கி சிவராம்!

You are currently viewing தனது எழுத்துக்களால் தனித்துவமான தடம் ஒன்றை பதித்த மாமனிதர்  தராக்கி சிவராம்!

 

தமிழினத்திற்காக உலகத்தின் வாசலகளை தட்டி நீதி கோரும் படலமாக மாற்றி,தனது எழுத்துக்களால் தனித்துவமான தடம் ஒன்றை பதித்த மாமனிதர்  தராக்கி சிவராம் அவர்கள் அவரது எழுத்துக்களால் அச்சம் கொண்ட உண்மைகளை சகிக்கமுடியாதவர்களின் கொலைக்குழல்களில் இருந்து வெளிவந்த சன்னங்களின் பசிக்கு இரையாகி கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி யில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ் மக்களின் விடுதலைப்பேராட்டப்பாதையிலே தடம்புரளாத ஊடகவியலாளராக பணியாற்றிய தராக்கி சிவராம் அவர்களை தமிழீழத்தேசியத்தலைவர் தமிழீழத்தின் அதியுயர் விருதான மாமனிதர் பட்டமளித்து மதிப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இன்று ஊடகவியலாளர்கள் நினைவுவணக்கம் செலுத்தியுள்ளனர்

யாழ் ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில்,  யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை நிறுவனமொன்றின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனத்தின் உரிமைக்காக நேர்மையாக பணியாற்றியபோது எதிரிகளால் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு தமிழ்முரசம் வானொலி தலைசாய்துக்கொள்கின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments