வெளிநாடுகளுக்குச் செல்வதன் மூலம், வேண்டுமென்றே தனிமைப்படுத்தலை மீறும் நோர்வே நாட்டு மக்கள், தங்கள் ஊதியத்தையும், சமூகநல கொடுப்பனவுகளையும் இழக்க நேரிடும் என்றும், இது எல்லையைத்தாண்டி பொருட்களை வாங்க செல்பவர்களுக்கும் பொருந்தும் என்றும், இன்று வியாழன் NRK குறிப்பிட்டுள்ளது.
(எடுத்துக்காட்டாக, சுவீடனுக்கு பொருட்களை வாங்க செல்வதன் மூலம் தனிமைப்படுத்தலை மீறுதல்)

தவக்கால விடுமுறையின்போது ஸ்வீடன் சென்றுவந்த 2000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் தங்களுக்கான ஊதியங்கள், அல்லது சமூகநல கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என்று தற்காலிக NAV இயக்குனர் Emilsen உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக தகவல் : Dagbladet