தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன்,  இன்றைய விடுதலை தீபங்கள்!

தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன்,  இன்றைய விடுதலை தீபங்கள்!

தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்! 1

“சிங்கள அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட தன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ இவன்”

“லெப் கேணல்..மாறன் / குன்றத்தேவன்”
[காதர்முகைதீன் நஐீம்கான்.]
(முல்லைத்தீவு மாவட்டம்)
வீரச்சாவு .29.09.2008

இலங்கை இனவாத அரசின் அடக்குமுறை ஆட்சிப் பீடம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொல்லொனாத் துன்பங்களை அள்ளிக்கொடுத்த காலம் அது.
போராட்டத் தேவையை ஆழமாக உணர்ந்த பல முஸ்லீம் இளைஞர்கள் எமது போராட்டத்தில் இணைந்து பங்காற்றினர்.
இவர்களுள் குன்றத்தேவனும் போராடப் புறப்பட்டான்.

மதம்,சாதி என்ற எல்லைக்கோடுகளை அழித்து ஒரே இனம் என்ற தேசிய உணர்வெழிச்சியும்,ஒரே தாய்நிலம் என்ற தாயகப் பற்றுணர்வும் முஸ்லீம் இளைஞர்கள் எமது இயக்கத்தில் வீரப்புலிகளாக களம் குதித்தனர்.

1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவனாக வந்த மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன் .அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து .மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.அங்கு சில காலம் களமுனையில் நின்றவன் .தொடர்ந்து கடற்புலிகளின் தரைத் தாக்குதலனியான சூட்டி படையணி வடமராட்சிக் கிழக்கு களமுனைக்கு அனுப்பப்பட்டபோது இவனும் அங்கு சென்று ஓயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினான்.அத்தோடு கைப்பற்றப்பட்ட இடங்களை பலப்படுத்தி ஒரு முன்னரங்க நிலை அமைப்பதில் சக போராளிகளோடு இணைந்து செயற்பட்டான்.தொடர்ந்தும் அங்கே நின்றவன்.தலைவர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக சூட்டி படையணியில் இருந்தவர்களிள் குறிப்பிட்டபோராளிகள் கடற்தாக்குதல் படையணிக்குள் உள்வாங்கப்பட்டபோது மாறனும் ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் லெப் கேணல் தியாகன் அவர்களுடன் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாகவும் பின்னர் படகின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டவன்.
சமாதான காலத்தில் இவனது செயற்பாட்டாலும் இவனது பழக்கவழக்கத்தை நன்கு கவனித்த தளபதி இவனை தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக விடுதலைப் புலிகளின் சகல படையணிகள் மற்றும் துறைசார் போராளிகளை உள்ளடக்கிய இளநிலை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டபோது கடற்புலிகள் சார்பாக இவனும் சென்றான் .இப் பயிற்சித்திட்டமானது இலகுரக ஆயுதங்களுக்கான பயிற்சித்திட்டமும் உள்ளடக்கப்பட்டது .அவ் இலகுரக ஆயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கி கடற்புலிகளுக்கு பெருமை தேடித்தந்தான் என்று கூறுவதில் மிகையாகாது . அத்துடன் இவன் பயிற்சிகள் படிப்புக்கள் விளையாட்டுக்களில் சிறந்து விளங்கி தலைவர் அவர்களிடம் பரிசுகளையும் சான்றிதல்களையும் பெற்றவன். சிலகாலம் தரைத்தாக்குதலணிகளுக்கும் பயிற்சியாலனாகவும் செயற்பட்டான்.இதற்கிடையில் தன்னை கடற்கரும்புலிகள் அணிக்கு தன்னை இணைத்துக் கொள்ளும்படி தலைவர் அவர்களுக்கு பலமுறை கடிதமூலம் கேட்டதற்க்கு மாறனுடைய சகோதரன் மாவீரன் என்பதால் அவருடைய கோரிக்கை தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.தொடர்ந்து இயக்கத்தின் தேவை கருதி படையப் புலனாய்வுத்துறைக்குச் சென்றவன்.அங்கு இரகசிய வேலையும் இயக்கத்தின் முக்கியத்துவமிக்க பணியையும் மிகவும் செவ்வனவே பணியாற்றியவன் .அப்பணி முடிந்ததும் மீண்டும் கடற்புலிகளணிக்குத் திரும்பிய மாறன்.சிறப்புத் தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைவாக கனரக ஆயுதப் பயிற்சி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவன் .தொடர்ந்து பல போரளிகளுக்கு கனரக ஆயுதப் பயிற்சி வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் முதுநிலை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு கனரக ஆயுதப் பயிற்சியாளனாக சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டதுடன் .அத்தோடு தானும் கிடைக்கும் நேரத்தில் தானும் அக்கற்கைநெறிகளில் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் கற்றுக்கொண்டான்.தொடர்ந்து கடற்புலிகளின் சிறப்புப் படையணியின் ஒரு அணியின் பொறுப்பாளனாகவும் வெவ்வேறு களமுனைகளில் மிகவும் சிறப்பாகப் பங்குபற்றியவன்.அக் காலப்பகுதியில்


கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படைமினிமுகாம்கள் மீதான வேவு நடவடிக்கைகளிலும் திடீர்த்தாக்குதல்களிலும் செவ்வனவே பங்காற்றி அதற்கான பரிசில்களையும் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் பெற்றுக்கொண்டான். தொடர்ந்து கனரக ஆயுதத்தின் ஒரு தொகுதிக்கு பொறுப்பாளனாக முழங்காவில் களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கெதிரான மறிப்புச் சமரில் மிகவும் திறம்பட செயற்பட்டான்.இப்படியாக பலபோராளிகளை கனர ஆயுதத்துறையில் பயிற்சி வழங்கிய ஒரு ஆசான் இக்கட்டான பிரதேசங்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய ஒருவீரன். பல்வேறு களங்களில் பல்வேறு நிலைகளில் செவ்வனவே பங்காற்றிய மாறன் . 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 
முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்தான் மாறன்.

தாயக விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் முஸ்லீம்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாகும். நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாவீரர்கள் வீர விதையாக மண்ணிலே மடிந்தவர்கள்.
பெரும்பான்மை இனத்தினரின் அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்த வீரமறவர்கள் இவர்கள்.

விடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த முஸ்லிம் மாவீரர்களில் முதல் லெப் கேணல் தகைமை உடைய பெருமை லெப் கேணல் மாறன்/குன்றத்தேவனையே சாரும்.

தமிழினத்தின் சுதந்திரத்திற்காகப் போராடி மடிந்த அனைத்து மாவீரர்களையும் இன்றைய நாளில் நினைவு கூர்ந்து நெஞ்சிலே நிறுத்தி பூசித்து வணங்கி இந்த உன்னதமான மறவர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து பயணிப்போம்.

என்றும் நினைவுகளுடன் அலையரசி…

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள