மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் இன்று காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 69ஆவது வயதில் காலமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியை நேற்று நடைபெற்றது.
வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரின் உடல், நேற்று மதியம் வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்குப் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.
அவரது இறுதி நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)






