தமிழகத்தில் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 621ல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது என்றார். இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 64 வயது பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
