தற்காலிக இடுகாடுகளாக மாறும் நியூ யோர்க் நகர பூங்காக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing தற்காலிக இடுகாடுகளாக மாறும் நியூ யோர்க் நகர பூங்காக்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வால் மிகுந்த பாதிப்படைந்திருக்கும் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரத்தில் மரணமைடைபவர்களின் உடலங்களை பாதுகாக்க போதிய இடமில்லாததால், நகரத்தின் பூங்காக்களில் உடலங்களை தற்காலிகமாக அடக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 599 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், இதுவரை 4800 மரணங்கள் பதியப்பட்டுள்ளதாகவும், 1.30.000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், நியூ யோர்க் நகரில் உடலங்களை பத்திரப்படுத்தி வைக்கும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாகவும் தெரிவிக்கும் அந்திமகாலசேவை நிறுவனங்கள், மென்மேலும் மரணங்கள் எதிர்பார்க்கப்படுவதால் உடலங்களை பாதுகாத்து வைப்பதில் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றன.

தற்காலிக இடுகாடுகளாக மாறும் நியூ யோர்க் நகர பூங்காக்கள்!

இதனால், நகரத்தின் பூங்காக்களை தற்காலிக இடுகாடுகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, இதுவிடயமாக தனது கவனத்துக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லையென நியூ யோர்க் ஆளுநர் “Guvernør Andrew M. Cuomo” தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள