தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டாம்!

You are currently viewing தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து முற்றுகை போராட்டாம்!

கோவை– தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மலையாள சமாஜம் முற்றுகை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை நவகரையில்  (26/11/2021) இரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த இரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழ்நாடு வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ரயில்வே அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே காவல்துறையினரும் சிறைபிடித்துள்ளனர்.

தமிழன வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் வனக் காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு இரயில் நிலையத்தில் சிறைபிடித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தமிழ்நாடு வனத்துறை ஊழியர்கள் சிறைபிடிக்கபட்டுள்ள நிலையில் வனத்துறையினரை மீட்க கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளை கேரளா சிறை பிடித்துள்ளதை கண்டித்து   (27/11/2021) மாலை 7 மணி அளவில் கோவை மலையாள சமாஜத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தோழமை அமைப்புகள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக அதிகாரிகளுக்கு ஆதரவாக கோவையில் மலையாள சமாஜத்தை முற்றுகையிட்ட, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனுக்கு வேட்டைத் தடுப்பு காவலர், மதுக்கரை வனச்சரகம் அதிகாரி மு.கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழக அரசு வனத்துறை அதிகாரிகளை கேரள அரசு சிறைபிடித்த செய்தியை அறிந்து உடனே போராட்ட களத்தில் இறங்கி களப் பணியாளர்களுக்காக

பெரும் ஆதரவு அளித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சார்ந்த திரு. கு.ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் அவர்களுக்கு மதுக்கரை வனவேட்டைத் தடுப்பு காவலர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply