தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு தமிழுக்காக தொண்டாற்றியவர்களுக்கும் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கும் ஆண்டுதோறும் தமிழக அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாலமுருகன் அடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தமடை பரமசிவத்திற்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் பழநிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயசீல ஸ்டீபனுக்கு தி.ரு.வி.க விருதும், முனைவர் இரா.கருணாநிதிக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கப்பட உள்ளது. முத்தரவுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சுப.வீரபாண்டியனுக்கு பெரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக 2 லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.