மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

You are currently viewing மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18    தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று மாலை உத்தரவிட்டார்.

தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை  வட தமிழீழம் மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மன்னார் – தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட  தமிழக கடல் தொழிலாளர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து 18 கடற்தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த 18 பேரையும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று (17) மாலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது மன்னார் நீதவான் குறித்த 18 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments