தமிழக தேர்தல் முடிவுகள்!!

You are currently viewing தமிழக தேர்தல் முடிவுகள்!!

தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து ஈழவிடுதலைக்கருத்துக்களை எம்மை அழித்தவர் நாட்டில் முன்னெடுத்து எமது விடுதலை இயக்கத்தின் தியாகமும் வீரமும் இளைஞர் மனங்களில் தீயாய் பரவும் அரசியலை முன்னெடுத்து குறுகிய காலத்தில் தமிழ் நாட்டின் மூன்றாவது கட்சியாக வரலாற்றில் பதிவாகியுள்ளது நாம்தமிழர் கட்சியினர்.

தோற்றாலும் வென்றாலும் வரலாற்றுப்பாதை சரியாக செல்லவேண்டுமென்ற தேசியத்தலைவரின் சீரியசிந்தனையில் செந்தமிழ் சீமானின் அரசியல் சரியான வரலாற்றினை பதிவுசெய்து பயணிக்கிறது.

  • தனிக்கட்சியாக போட்டியிட்டமை
  • எக்காரணங்கொண்டும் ‘திராவிட’ கட்சிகளுடன் கூட்டுச் சேரமாட்டோம் என அறிவித்தமை
  • வேட்பாளர் பட்டியலில் சரி பாதி இடம் பெண்களுக்கு வழங்கியமை
  • வாக்குக்குபணம் வழங்கமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துச் செயற்பட்டமை
  • எந்தவொரு கோர்பரேட் நிறுவனத்தையும் அழைத்து மூலோபாய ஆலோசனை பெற்றுக் கொள்ளாமை
  • ஊடகபலமின்மை

இவ்வாறான பின்புலத்தில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ‘திராவிட’ ஆட்சி நடைபெறும் ஒரு மாநிலத்தில் மூன்றாவது இடத்திற்கு வருவது ஒரு சாதனை என்பதனை மறுக்க முடியாது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments