தமிழருக்கு தன்னாட்சி அதிகார அலகை மறுத்த சிங்கள அரசு அதே அதிகாரபகிர்வை சீனாவுக்கு வழங்குகிறது!

You are currently viewing தமிழருக்கு தன்னாட்சி அதிகார அலகை மறுத்த சிங்கள அரசு அதே அதிகாரபகிர்வை சீனாவுக்கு வழங்குகிறது!

தமிழீழ விடுதலை புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார அலகை நிராகரித்த பெரும்பான்மை சிங்கள அரசு இன்று அதேபோன்ற அதிகார பகிர்வு அலகினை வெளிநாட்டிற்கு வழங்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பூகோள அரசியல் அதிகார போட்டிக்குள் நாட்டை சிக்க வைப்பதால் இந்த சட்டமூலத்தை தாம் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“ இந்த சபையில் இருக்கும் பெரும்பான்மையினர் மத்தியில் இனவாதம் மற்றும் வகுப்பு வாதம் தலையோங்கி நிற்கிறது.சமாதான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருந்த நேரத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகளினால் இடைக்கால தன்னாட்சி அதிகார அலகு என்ற ஒரு விடயம் முன்வைக்கப்பட்டது.

இந்த நேரத்தில் அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்த்திருந்தது. நீங்கள் அழிக்கவும் இனவழிப்பை மேற்கொள்வதையும் வலிந்து எடுத்துக் கொண்டீர்கள். ஆனால் இன்று நீங்கள் எந்தவித மாற்றமுமின்றி, அதேபோன்ற ஒரு அதிகார பகிர்வு அலகினை உருவாக்கியுள்ளீர்கள்.

இது முற்றிலும் பூகோள அரசியலை மையப்படுத்திய ஒன்றாகவே இருக்கின்றது. பூகோள அரசியல் அதிகார போட்டிக்கு இந்த அரசாங்கம் இடம்கொடுத்துள்ளது. இதனாலே நாங்கள் இதனை எதிர்க்கின்றோம். இன்று என்ன நடக்கின்றது என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளுவார்கள் என்பதை நாங்கள் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply