வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம் தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம் குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என
முல்லைத்தீவு அரசியல் செயற்பாட்டாளரும் முன்நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான துரைராஜா- ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் (30.09.2023) சனிக்கிழமை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் (18.01.2021) ம், ஆண்டு தொல்லியல் அகழ்வுகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தன.
அவ் அகழ் வாய்வில் லிங்கம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்து.
குறித்த லிங்கம் தொடர்பாக வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் – (2300) ஆண்டுக்கு முற்பட்டவை என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என வெளிவந்திருக்கின்றன.
குருந்தூர் மலை பேசப்படுகின்ற சின்னங்கள் பல்லவர் காலக்திற்கு உரியன என சிலர் கூறுகின்றனர்.
ஆனால் பல்லவர் காலக்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை இவை அக்காலத்திற்கு முற்பட்டனவாகும்.
அங்கே செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் தெளிவாகத் தெரிகிறது.
அவை நாகர் காலத்தோடு தொடர்புடையவை ஆகும். நாகர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் பனங்காமம், ஓமந்தை போன்ற இடங்களில் பெருமளவில் காணப்படுகிறது.
இங்கே காணப்படுகின்றது சிவலிங்கம் எனக் கூறப்படுவது சாலப் பொருந்தும். உறுதியாகக் கூறப்படுவது என்னவென்றால் அது பழங்காலத்து லிங்க உருவம். லிங்க காலத்து ஆரம்ப வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுளின் பெயர் எழுதப் பட்டுள்ள வடிவம். சைவ சமய சின்னமாக அமைகின்றது என்றகருத்தை பேராசிரியர் தெளிவாக வழங்கியுள்ளார்.
இவற்றை எல்லாம் கூறக் காரணம் சிங்களவர்களே ஆதிகாலம் தொட்டு இருந்த தென்று பறைசாற்றிக் கொண்டு இருக்கும் நேரத்தில் இங்கே தமிழர்கள் தான் இருந்தார்கள் தமிழர் தமது பூர்வீக தாயகத்திலே சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதிப் படுத்தி இருக்கும் போது தங்களுடைய கருத்துகளை திணித்து எங்களுடைய மதத்தை அழிக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் இவ்வாறான நிலைதான் இங்கு இருக்கிறது.
உறுதியாக சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயன் ஆலயம் தொண்று தொட்டு இருந்து வருகிறது என்பதனை இதனூடாக உறுதிப் படுத்து கின்றோம்.
காணி விடயங்களில் 12.05.1933,ம் ஆண்டு 78,ஏக்கர் 02,றூட்,13, பேர்ச் காணி தொல்லியல் ஆய்வுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மை இதன் பின்னர் 306,ஏக்கர் காணி இவர்கள் தொடர்ச்சியாக கேட்டு வந்த நிலையில் அவ்வளவு ஏக்கர் ஏன் எனவும் ஐந்து ஏக்கர் எடுக்குமாறு கூறியதாக ஜனாதிபதி கூறியதாக ஊடகங்களில் அறியக்கூடியதாக இருந்தது.
தெய்வ நம்பிக்கை உள்ள இடத்தினை கொச்சைப் படுத்த முடியாது பூர்வீக சைவ இடம் தான் என்பதனை உறுதியாக குறிப்பிடுவதோடு வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம்.
தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம்.
குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப் படுத்து கின்றது.
தற்போது ஒரு ஏக்கர் பௌத்தத்திற்காகவும்,ஒரு ஏக்கர் சைவத்திற்காகவும், ஒரு ஏக்கர் பொதுத்தேவைக்காகவும் என கடந்த 21, திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதுவும் மலை அடிவாரத்தில் வேறே இடத்தில் தருவதாக கூறுவதற்கு இவர்கள் யார்? என்று நான் கேட்பதற்கு விரும்புகின்றேன்.
உதாரணத்திற்கு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று வழிபடுங்கள் என்று இவர்கள் கூற முடியுமா?
ஏனென்றால் இது எங்களுடைய பூர்வீக தாயக சைவ வழிபாட்டிற் உரிய இடம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடம் தான் எங்களுக்குரிய வழிபாட்டு இடமே தவிர, இவர்கள் தாங்கள் திட்டமிடுவதற்கும் வேறு இடத்தில் ஆலயம் அமைக்க கூறுவதற்குமான இடங்கள் அல்ல பூர்வீக இடத்தில் நாங்கள் வழிபடவேண்டும்.
கடந்த 27.01.2021, ஆண்டு சூலம் உடைக்கப் பட்டுள்ளதனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன்.அத்தோடு 29,ம் திகதி சூலம் இல்லை என்பதையும் முறைப்பாடு மேற்கொண்டிருந்தேன்.
முல்லைத்தீவு பொலிசார் நேரடியாகப் பார்த்து உறுதிப் படுத்தியும் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யாமல் பொலிசாரும் உடந்தையாக இருந்து எங்களுடைய வழிபாட்டுச் சின்னங்களை மறைப் பதற்கும் வழிபாடுகளை நிறுத்து வதற்குமான வேலைகளை தான் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.