தமிழினப் அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து (02.09.2021) ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி (20.09.2021) நகர்கின்றது.
வரலாறுகளில் இருந்து மறைக்கமுடியாத எத்தனையோ வலி சுமந்த கறுப்புப் பக்கங்களோடே தமிழினம் தன் போராட்ட வாழ்கையினை தொடர்கின்றது. இராசதானிகளாக அரச இராட்சியங்களாக இருந்த தமிழர்களின் தனித்துவமான நாடு காலனித்துவ ஆக்கிரமிப்பினால் கூறுபோடப்பட்டு எமது இறையாண்மை சிங்களப்பேரினவாத அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டபோதே நாம் இனவழிப்பிற்கு ஆளாகிவிட்டோம்.
தனிச்சிங்களச் சட்டம் ,கல்வித் தரப்படுத்தல் , தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறைப் படுகொலை …தமிழர் பாரம் பரிய நிலங்களில் திட்ட மிட்ட சிங்கள குடியோற்றம் என தாங்கொணா இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் போராட்டம் பல ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தில் இன்று அறவழிப்போராட்டமாக களங்கொண்டிருக்கின்றது.
2009ம் ஆண்டு கொடூரத்தனமான முள்ளிவாய்க்கால் தமிழினப் அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு நடந்தேறி தமிழர்கள் நிற்கவோ நிலைக்கவோ கதியற்று புலம்பெயர் தேசங்களிலே ஏதிலிகள் ஆனோம். இந்த நிலை தொடராது வெகுவிரைவாக எமது மண்ணை மீட்டு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் வழிகாட்டலில் தமிழீழத்தில் வாழ நாம் காலத்தின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் 2021ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளார் மதிப்பிற்குரிய Michelle Bachelet அம்மையாரால் கூறப்பட்டதற்கு இணங்க சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
அதற்கமைய எதிர்வரும் 02.09.2021 அன்று பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமாக இருக்கின்றது.
தொடர்ந்தும்
•இரண்டாம் நாளான 03.09.2021 அன்று Netharlands , Den hag ல் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பி.ப 1 மணிக்கும்
• 06.09.2021 அன்று Belgium, Brussels ல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் முன்றலில் பி.ப 1 மணிக்கும்
- 16.09.2021 அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு இறுதியாக
- 20.09.2021 அன்று Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்)
பெரும் எழுச்சியோடு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கான தீர்வினை பறைசாற்ற இருக்கின்றது.
எம் தமிழ் உறவுகளே காலம் எமக்கான வாய்ப்பினை தந்தருளி இருக்கின்றது எனவே தமிழின அழிப்பால் பாதிக்கப்பட்டு வேறு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் எம் வாழிட நாடுகளில் தமிழின அழிப்பின் பாதிப்பினை முறைப்பாடு செய்து எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டும் அதே வேளை தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்னும் நீதியைபெற முடியும்.
அனைத்து தமிழர்களும் தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் தொடர்பு கொண்டு தமிழின அழிப்பிற்கான சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.
“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.