தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்!

நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து  தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு  ஆரம்பமான அறவழிப்போராட்டம்

​ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற  கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்​

(31.08.23 வியாழக்கிழமை) பிரித்தானியா Wallington Green இலிருந்து ஜெனிவா நோக்கித் தொடங்கப்பட்ட  மிதியுந்துப் பயணம் எழுச்சியோடு நடைபெற்று இலக்கம் 10, Downing Street பிரதமர் இல்லத்தில் நிறைவடைந்தது.

இப்போராட்டப்பயணத்தின்   இரண்டாம் நாளான   (01.09.23 வெள்ளிக்கிழமை)  நெதர்லாந்திலிருந்து  அகவணக்கம் செலுத்திய பிறகு தனது தாயக விடுதலை சுமந்த பயணத்தை தொடர்கின்றது

இரண்டாம் நாளான 01.09.2023 நெதர்லாந்து  குற்றவியல்  நீதிமன்றத்தின் முன் அறவழிப்போராட்டம் நடத்துவதுக்கு அனுமதி மறுத்த நிலையிலும்  தடைகளையும்   உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு  அறவழிப்போராட்டம் ஆரம்பமானது

இதனை தொடர்ந்து இன்றைய நாளில் நெதர்லாந்து  நாட்டில்  அமைந்துள்ள  குற்றவியல் நீதிமன்றம் சென்று பல உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் அரச மட்டச் சந்திப்புக்களில் இணைந்து கொண்டு தமிழின அழிப்பிற்கான நீதியையும் விடுதலையையும் வலியுறுத்தியவாறு ஐ.நா மன்ற செயலகத் திடலில் 18.09.23 திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேரணியுடன் இணைந்து இப்போராட்டப்பயணமானது நிறைவடையவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments