13ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயணம் பிரான்சில் பல அரசியல் சந்திப்புக்களை மேற்கொண்டு எல்லையை நாளை சென்றடைகிறது.
24/02/2026 செலட்சாட் மாநகரசபையின் முன்றலில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம் செலட்சாட்,கொல்மார் , வித்தனைம்,முலூஸ் மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டு மனுக்கொடுத்து தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் இலங்கை தீவில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தினார் . இன்றைய பயணம் கரடுமுரடான பாதையிலும், பள்ளம் மேடுகளில் தொலை தூரம் கடந்து வந்து சந்திப்பிற்கு திட்டமிட்ட நேரத்தில் சமூகமளிக்கமுடியாத நிலைஏற்பட்ட போதும் மாநகர சபை முதல்வர், உதவி முதவல்வர்கள் மேலும் உறுப்பினர்கள் காத்திருந்து மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்று கலந்துரையாடினர்.
சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்ற எங்கள் கோரிக்கையை தாங்கள் பிரான்சு நாட்டின் அதிபருக்கும் வெளிநாட்டு அமைச்சிடமும் வலியுறுத்துவதாகவும் உறுதியளித்தானர். மற்றும் குளிர் பானங்கள், சிற்றுண்டி தந்து உபசரித்து மிகவும் கரிசனையோடு நாங்கள் செய்ய வேண்டிய போராட்டங்கள் பற்றியும் ஆலோசனை வழங்கினார். இன்று 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இரவு 8.30 மணிக்கு முலூஸ் மாநகர சபை முன்றலில் நிறைவுக்கு வந்தது.
இன்று (25/02/2026) பி.ப 15.00 மணிக்கு சுவிசு நாட்டின் எல்லை பாசல் மாநகரத்தினை சென்றடைகின்றனர்.
“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.






