3ம் நாளாக (04/09/2021) பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் 270Km கடந்து நெதர்லாந்தில் நாட்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் 23 ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் கடந்த 02.09.2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து இன்று 04.09.2021 நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பெல்சியம் நாட்டின் எல்லையினை அண்மித்துக்கொண்டு இருக்கின்றது.

இன்று (04.09.2021) காலை ரொத்தடாம் மாநகரசபை முதல்வரிடம் மனு கையழிக்கப்பட்டு “தமிழர்களுடைய தொடர் போராட்டமே விடுதலையினை வென்றெடுக்கும்” என்னும் வாழ்துச்செய்தியும் மனித நேய ஈருருளிப் போராட்ட செயற்பாட்டாளர்களோடு பகிரப்பட்டது. மற்றும் இன்றைய நிகழ்வில் நெதர்லாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு ஜெயா அண்ணை அவர்கள் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டத்தில் கலந்துகொண்டு மனித நேய செயற்பாட்டாளர்களை ஊக்குவித்தார்.

எதிர்வரும் 48 ஆவது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும், அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”
- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.