விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

You are currently viewing விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கி வந்த ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமாகியுள்ளார்.

1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார்.

இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.

நீண்டகாத்திருப்பு நூல் அண்மையில் வாசித்திருந்தேன் அதில் போயகொட (நூல் ஆசிரியர்,ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி,புலிகளினால் கைது செய்யப்பட்டு எட்டு வருடங்கள் சிறையிலிருந்தவர்)
பல தடவைகள் தயாமாஸ்டரோடு சேர்த்து
ஜோர்ச் மாஸ்டர் பற்றி கூறியிருப்பார்
அதில் செஞ்சிலுவைச்சங்கக்கூட்டங்கள்கூட யார் இருப்பாரோ இல்லையோ ஜோர்ச் மாஸ்டர் இருப்பார் என எழுதியிருந்தார்.
அவருடைய சாமர்த்தியம் அன்பு என பலவற்றை விபரித்திருந்தார்.

முன்னாள் போராளி ஒருவருடைய பதிவில்
எத்தனைபெரிய சந்திப்பாயினும் மாஸ்டர் வந்து அங்க இருக்கிற மரத்தில சைக்கிளை சாத்திப்போட்டு வந்தா பிறகு தான் தொடங்கும் என்றவாறு இருந்தது.
பூரித்துப்போய்விட்டேன்.

போயகொடோவின் விபரிப்பில் அவதானிக்க்கூடியது
தபாலதிபராக கடமை புரிந்த ஜோர்ச் மாஸ்டர் போன்றோர் அமைதியிழந்து விடுதலைப்போராட்டத்தோடு ஒன்றித்து அதற்க்காக அர்பணிப்போடு பயணிக்க
ஒரே ஒரு காரணம் தான்

அது திட்டமிட்டு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புச்சம்பவங்களே !

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments