தமிழின அழிப்பு குற்றவாளிகளை ஐசிசிக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும்!

You are currently viewing தமிழின அழிப்பு குற்றவாளிகளை ஐசிசிக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும்!

கனடிய எதிர்கட்சி தலைவர் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் பங்கு கொண்ட இராணுவ அரசியல் தலைமைகளை உலக நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தினார்

அண்மையில் கனடிய பாராளுமன்றில் கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. Jan 30, 2023 திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் உற்பட கனடாவின் எல்லா கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இருந்தனர். கனடிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கனடாவின் எல்லா பாகங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

ஈழத்தழிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கான நிரந்தர நீதியை பெற்றுக்கொடுக்கும் பாதையில், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மனித உரிமை சார் குற்றவாளிகளாக அறியப்பட்ட இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் மீது சில தடை உத்தரவுகளை அண்மையில் கனடா அரசாங்கம் விதித்திருந்தமையை இந்த நிகழ்வில் எல்லோரும் மெய்ச்சினர்.

கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre தனது உரையில் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றங்களான ICC (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) மற்றும் ICJ (சர்வதேச நீதிமன்றில்) காத்திரமான முறையில் கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போதைய சிறிலங்கா அரச தலைவர்கள் மீதான தடை ஒரு சிறிய முன் செயலாகவும் எதிர்காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அதிக அளவிலான இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்களும் உள்ளடுக்க படவேண்டும் என்றும். அவர்கள் மீது பாரிய வழக்குகளை கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். இப்படியான நீதியை தமிழர்களுக்கு பெற்று கொடுப்பதால் தான் எதிர்காலத்தில் மனித உரிமை பாதுகாக்க படும் எனவும் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply