தமிழீழத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச் சுடர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவேந்தல் .
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான காலப்பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து, உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 38 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
இதனடிப்படையில் தமிழீழத் தாயகத்தில் பல பகுதிகளில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், தென் தமிழீழம் மட்டக்களப்பில் தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் இறுதிநாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது











இதேவேளை இலட்சியத் தாயின் நினைவாக ஏப்ரல் மாதம் 19ம் திகதியை தமிழீழ தேசியத்தலைவர் தேசிய நாட்டுப்பற்றாளார் நாளாக பிரகடனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயக விடியலில் தாகம் கொண்டு பல சர்ந்தப்பங்களில் தங்கள் உயிரை அர்பணித்து அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!






