வட தமிழீழத்தில் கொட்டுத் தீ்ர்த்த அடை மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களுலும் 17 ஆயிரத்து 598 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயி்த்து 676 பேர் பாதிப்படைந்துள்ளதோடு ஆயிரத்து 914 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 430 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் உறுதி செய்கின்றன.தற்போது நிலவும் பருவ மழையின் காரணமாக அதிக நீர் வரத்தின் காரணமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான இரணைமடுக் குளத்துன் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் ஏனைய குளங்களும் வான்பாய்கின்றது.மன்னார் மாவட்டத்தில் 426 குளங்கள் உள்ள நிலையில் அதிகமானவை கொள் அளவை நெருங்கும் அதேநேரம் இதுவரை 35 குளங்கள் வான்பாய்வதோடு ஒரு குளம் உடைப்பெடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் 594 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 154 பேர் பாதிப்படைந்த நிலையில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேர் 6 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 93 மில்லி மீற்றர் பொழிய்துள்ள நிலையில் ஆயிரத்து 538 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 263 குடும்பங்களைச் சேர்ந்த 765 பேர் 4 இடைத் தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் அதேநேரம் நேற்றைய தினம் 81 வீடுகளும் அதற்கு முன்பு 43 வீடுகளெம் சேதமடைந்துள்ளன.வவுனியா மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 237 மில்லி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் இதுவரை 328 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் அதிகமானோர் வவுனியா வடக்கு நெடுங்கேணியை அண்டிய பகுதி மக்களும் செட்டிகுளம் பகுதி மக்களுமே பாதிப்படைந்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் பொழியும் அடை மழை காரணமாக 6 ஆயிரத்து 841 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 262 பேர் பாதிப்படைந்துள்ளதோடு ஆயிரத்து 920 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 265 பேர் இடம்பெயர்ந்து மாவட்டத்தின் 9 இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் இரணைமடுக்குளம் திறக்கப்பட்டுள்ளதனால் பாதிப்புக்கள் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட 233 மில்லி மீற்றர் மழையுன் காரணமாக இதுவலையில் 9 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 20 பேர் பாதிப்படைந்துள்ளனர் . இவர்களில் 323 குடும்பங்களைச் சேர்ந்த 1063 பேர் இடம்பெய்ந்த நிலையில் 15 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.