தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.

You are currently viewing தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை  வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர்.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

• ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார். 

• இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.  

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு “விளக்கேற்றி”, வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் ” Road to nanthikkadal ” என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும்.

அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “விழிப்பே விடுதலையின் முதற்படி” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள “விளக்கேற்றல்” நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம்.

பேரன்புமிக்க எமது மக்களே!

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில்,  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.  

​
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 1
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 2

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,  பிரித்தானியா அறிக்கை 

​

பேரொளியாகி வழிகாட்டும் மேதகுவின் சித்தாந்தங்களை ஒரு சிறிய தீபமேற்றி அணைத்துவிட முடியாது. 

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரித்தானிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே!

 வணக்கம். 

​

எமது தமிழீழத் தேசத்தின் தாய்மடியிலே, முன்னைத்தமிழ் வீர மரபொன்றின் விழுதாகி, இயற்கையின் விருப்பிலும், நேசிப்பிலும் உவந்தளிக்கப்பட்ட வரலாற்றுப் பேறாக வந்துதித்த தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் என்ற உன்னதரின் வருகையும், அதன் பின்னரான தமிழினத்தின் கூட்டுப் பண்புருவிலிருந்து மிகத்துல்லியமாக முன்மாதிரியாகத் திகழத் தொடங்கிய இளம்பராயத் துடிப்பாற்றலும், மண்ணினதும் மக்களினதும் மொழியினதும் நேர்கொண்ட உண்மையான நேசிப்புமாக, வரலாற்றைத் தானே உருவாக்கத் தொடங்கிய நாளிலிருந்து, இன்றுவரையும் இனி என்றென்றும் பேரொளியாக வழிகாட்டி, தமிழீழ விடுதலைக்கான திசைநோக்கி எம்மை நகர்த்தும் மேதகு என்ற வாழும் சித்தாந்தத்தை ஒரு சிறிய தீபமேற்றி அணைத்துவிட முடியாது.

தமிழீழ விடுதலையென்ற இலட்சியக் கனவைச் சுமந்தபடி, தொடர்ச்சியான காலமாற்றக் கடமைகளைத் தடம் மாறாது சுமந்து பயணிக்கும் ஒவ்வொருவரது பாதங்களையும் அடித்துச் சிதைத்துவிட வேண்டுமெனவும், அதன் அச்சத்தால் இலட்சியத்தைக் கைவிட்டு, இடைநடுவிலே போட்டுவிட்டு வெறுமைக்குள் இருக்க வேண்டுமென சிங்களப் பேரினவாதிகளும், வல்லாதிக்கப் போட்டியாளர்களும் கனவிலே மிதக்கின்றார்கள். அவர்களுடைய கனவுகளுக்கு உருவேற்றிவிடத் துடித்து, அதனைத் தமிழீழத் தேசத்து இதயத்திலேயே அரங்கேற்றிவிடவும் எதிரிகளால் உருவாக்கப்பட்ட தமிழின விரோதக்குழுக்கள் வரிந்துகட்டி வலம்வருகின்றார்கள்.

எமது தமிழீழத் தாய்மடியின் விடுதலைக்கான பேரவாக்களை, உணர்வுகளாலும், பொருளாதார மேலீட்டாலும் தம்மாலான கொள்ளளவுப் பருமனையும் தாண்டி எவ்வளவு தார்மீகமாக அள்ளிச் சுமக்க முடியுமோ அவ்வளவாகத் தாங்கிச் சுமந்த பிரித்தானிய தேசவாழ் மக்களானாலும் சரி, அதேபோன்று உலகவாழ் ஈழத்தமிழ் மக்களானாலும் சரி, இந்தசூழலைத் தெளிவாக விளங்கிக்கொண்டு,சுவிற்சர்லாந்து நாட்டிலே சில குழுக்களால் நிகழ்த்தவிருக்கும் மேதகுவிற்கான விளக்கேற்றல் நிகழ்வினைத் தார்மீகமான பண்புகளோடு புறக்கணிக்குமாறு உரிமையோடும், உறுதியோடும், உளவேதனையோடும் வேண்டிக் கொள்கின்றோம்.

தமிழர்களின் விடுதலைப் பாதையென்பது, மேதகுவின் அறம் நிறைந்த வழிகாட்டுதலில் எத்தகைய உயரிய தியாகங்களின் கனதியாலும், எமது மக்களது அசைக்க முடியாத உறுதியாலும் செப்பனிடப்பட்டிருப்பதை எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அச்சிறந்த செப்பனிடல் முள்ளிவாய்க்கால் தாண்டியும் பதினாறு வருடங்களாக நிலைத்திருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்தோடு பதினொன்றாக எமது கட்டமைப்புகளையும், பண்பாடுகளையும் வீதிக்கு இழுத்துவிடத் துடிக்கும் பல்வேறுபட்ட சுயநல ஈனச்செயல்களைப்  பிரித்தானிய தேசம் சந்தித்துக்கொண்டே இருந்தாலும், தடம் மாறாத தமிழர்களாக, விலைபோகாத மக்களாக வழிநடக்கின்றோமென்றால், அங்குதான் மேதகுவின் சித்தாந்தங்களும், கோட்பாட்டு அலகுகளும் எம்மை வழிநடாத்துகின்றன என்பதை மீண்டும் மீண்டுமாக நினைவிருத்துவோம்.

முள்ளிவாய்க்கால்ப் பேரவலம் தாங்கி, அந்த நெருப்பாற்றுப் பெருவெளியிலே தீக்குளித்துக் கரையேறிய நாள்முதலாய், எமது வரலாற்றுப் பேரியக்கம் மெல்ல மெல்ல ஆனால், உறுதியாகக் கட்டிக்காத்த தமிழீழம் என்ற உன்ன இலக்கை எதிரி விலைபேசத் தொடங்கியபோது, தம்மையறியாமலேயே அந்த நயவஞ்சக வலைக்குள்ளே விழுந்தவர்களும், சுகபோகங்களுக்காக விருப்புணர்ந்து இணைந்து செயற்படுபவர்களுமாக பலரும் தம்மையிழந்து நிற்கின்ற போதிலும், மண்ணுறங்கும் மாவீரர்களது வல்லமையோடும், மேதகுவின் வாழும் சித்தாந்த வழிகாட்டுதலோடும், இன்றும் நம்பிக்கையும் விடுதலை உணர்வும் குன்றாத மக்களாக இருக்கின்றோமென்றால் அந்த ஓர்மத்தை எதிரி அழித்துவிடவே திட்டமிடுவான் என்பதிலே சந்தேகமில்லை. இந்தப் புரிதல்களினூடாக யாரோ திட்டமிடும் விளக்கேற்றலை அறிந்தும் அறியாததுமான மக்களாக இல்லாமல் தெளிந்தே உறுதியாகப் புறக்கணிப்போம்.

அமைதிப்படை என்ற போர்வையிலே, அரிசிப்பொதிகளோடு ஈழநிலத்திலே காலடிவைத்த இந்திய வல்லாதிக்க அரசு எமது போராட்டத்தையும் தேசியத்தலைவரையும் அழித்துவிட எவ்வளவு சதிகளையும் கொடுமைகளைப் புரிந்தார்களென்பதை வரலாற்றின் கறுப்புப் பக்கங்களாகப் பாரத தேசம் வெட்கி நிக்கும் பக்கங்கள் உண்டு. 1989 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 02 ஆம் நாள் தமிழீழ தேசியத்தலைவரது சொந்த ஊரான வல்வை மண்ணிலே நிகழ்த்திய வல்வைப் படுகொலை, மற்றும் அதே மாதங்களிலே நிகழ்த்திய படுகொலைகள், மணலாற்றுக் கானக வாழ்வில் இந்திய வல்லாதிகத்தை எதிர்த்துநின்ற மேதகு இறந்துவிட்டாரென ஏற்படுத்திய பொய்ப் பரப்புரைகள் இவற்றையெல்லாம் ஒரு நேர்கோட்டு வரைபிலே விளக்கேற்றல் காலத்தோடு ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டியும், இதன் பின்னால் யார் உள்ளார்கள் எனவும்  மக்கள் மனங்களிலே சந்தேகம் இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியாது.

ஏற்பாட்டாளர்களென பிரித்தானிய தேசத்திலிருந்தும் கூவும் பலரும், மேதகுவிற்கு விளக்கேற்றிவிட்டு அதிலிருந்து ஒரு புதிய பொருத்தமற்ற வரலாற்றுத் தொடர்ச்சியைக் கையிலெடுக்கத் திட்டமிடுவதும், தமிழினத்திற்கு புதிய தலைமைத்துவ ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திப்பதும், சிறுபிள்ளைத்தனமானது என்பதை மக்கள் நன்கு உணர்வார்கள். இலையுதிர்த்துப் புதிய தளிர் கொள்ளும் இயற்கை விதிசொல்லும் கதையல்ல மேதகுவின் சித்தாந்தம். அந்த இயற்கையையே நண்பனாகக் கொண்ட முன்னைத்தமிழ் வரலாற்றையும், நிகழ்காலத் தமிழர் வாழ்வுரிமையையும் கூட்டிணைத்து வழிகாட்டும் எதிர்காலச் சுதந்திரமான தேசமதின் இயற்கைப் பேரொளி என்பதை உணரத் தவறுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால்ப் போர்வெளி தாண்டிப் பதினாறு வருடங்களாக “நிவாரணம்” என்ற சொல்லைத்தாண்டி ஏனைய எதற்குமே தகுதியற்ற இருப்புக்குள் தமிழினத்தை அமிழ்த்தி வைத்திருக்கத் துடிக்கும் சிங்களப் பேரினவாத கட்டுக்களை உடைத்துத் தன்னெழுச்சியாக மேலெழும் மக்கள் போராட்டங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியும் கொல்களங்களாகவும் புதைகுழிகளாகவும் அடையாளப்படும் இடங்கள் நோக்கித் திரட்சி கொள்கின்றார்கள். மக்களுக்கான தன்னெழுச்சியின் மூலக்கூற்றுப்பலம் தொடுபடுகின்ற புலம்பெயர்ந்த உறவுகளையோ அவர்கள் மூலமான உலக நீதி பெறுதலையோ தடுத்துவிட  சிங்களதேசம் எங்கெல்லாம் ஆதிக்கக் கரத்தை நீட்டுகின்றது என்பதிலே உறுதியாக இருப்போம்.

பிரித்தானிய வாழ் சொந்தங்களே! நிதானிப்போம்!!

மேதகுவிற்கு விளக்கேற்றிவிட்டு, முற்றுப்புள்ளி மூலமாக தமக்கான நிறைவைக்காணத் துடிக்கும் சிலரைப் போன்றே, தலைவர் வருகிறார், மகள் வந்துவிட்டார், பொட்டம்மான் வரப்போகின்றார் என்றெல்லாம் நிதிசேர்ப்பு வேட்டையிலும் பிரித்தானிய மண்ணிலிருந்தும் தொடர்புபட்டிருப்பவர்களை எமது மக்கள் இனங்காணாமலில்லை. மனச்சான்றுகளை விற்றுப் பிழைப்போரை இயற்கை தன் குற்றக் கூண்டிலே நிறுத்தித் தண்டிக்குமென்பதிலே ஐயமில்லை.

தமிழீழம் என்ற தனித்துவமான இலட்சியக் கனவை வரித்துக்கொண்ட நாம், தொடர்ந்தும் அதற்காகவே வழிகாட்டும்  மேதகுவின் சிந்தனையின் வழித்தடத்திலே பயணிப்போமென உறுதிகொள்வோம். சுதந்திரமான தேசத்தை சுவீகரித்து, பட்டொளிவீசி அசைந்தாடும் தமிழீழத் தேசியக்கொடியின் அசைவிலே, அந்நாளில் பூமிப்பந்தில் தமிழர் நாம் பேரெழுச்சியோடு ஆர்ப்பரிப்போம்.

நன்றி,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

பிரித்தானியா.

​
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 3
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 4
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 5
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 6

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு   – பெல்சியம் அறிக்கை .​

தமிழீழத் தேசியத்தலைவருக்கெதிரான சூழ்ச்சித்திட்டங்களை உடைத்தெறிவோம்.

தமிழீழத் தேசியத்தலைவருக்கெதிரான சூழ்ச்சித்திட்டங்களை உடைத்தெறிவோம் -தமிழர்ஒருங்கிணைப்புக்குழு  பெல்சியம்.

17.07.2025

தமிழீழத் தேசியத்தலைவருக்கெதிரான சூழ்ச்சித்திட்டங்களை உடைத்தெறிவோம்!

அன்பிற்குரிய பெல்சியம்வாழ் உறவுகளுக்கு வணக்கம்!

தமிழீழ விடுதலைப்போராட்டமானது .தமிழீழ மக்களையும் மண்ணையும் அடக்குமுறைக்குள் தள்ளி,தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துச் சிங்கள தேசமாக மாற்றும் திட்டமிட்ட இன அழிப்பிற்கெதிரான எரிமலைவெடிப்பாகும். தமிழினத்தை அடக்கியாளும் விலங்கினை உடைத்துத் தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க. என்றும் அடிபணியா உறுதிமிக்க வீரத்தோடு, தமிழீழ விடுதலைப்போராட்டத்தினைத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்,தன்னுடைய சிந்தனை வழிநின்று அதற்கான பாதையினைத் திறந்து,உலகமே வியக்கும் உயர்ந்த அர்ப்பணிப்புகளோடு வீரம்செறிந்த போராட்டத்தை நகர்த்தித் தமிழீழ அரசை நிறுவினார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வீரியத்தினைத் தடுத்து, தமிழீழத் தேசியத்தலைவரின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கி, தமிழீழத்தினைச் சிங்கள தேசமாக மாற்றும் நாசகார வேலைத்திட்டங்கள், பல ஆண்டுகளாக பல்வேறு வழிகளிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்ததும் அவை,தேசியத்தலைவரின் சிந்தனை வழிநின்று தகர்க்கப்பட்டமையும் வரலாற்று உண்மையாகும்.கடந்த சில ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத்தலைவரின் இருப்பு சார்ந்தும் தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவது சார்ந்தும் இருமுனைகளில் தமிழினத்தை குழிதோண்டிப் புதைக்க எதிரிகளின் நிகழ்ச்சி நிரலோடு பல குழுக்கள்  களமிறங்கியிருந்தனர். அவர்களின்ஏற்பாட்டில்  நடைபெறவுள்ள வீரவணக்க நிகழ்விற்காக, உணர்வுமிக்க பலர் மடைமாற்றப்பட்டுள்ளனர்.

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும் உலகமுள்ளவரை தமிழினத்தின் ஒப்பற்ற தமிழீழத் தேசியத்தலைவருமாவார். அவரது சிந்தனை வழிநின்று அர்ப்பணிப்போடு, உறுதிதளராமல், கொள்கைவழி நின்று போராடித் தமிழீழத்தை மீட்டெடுப்பதே எமக்காய் தம்முயிர் கொடுத்த பல்லாயிரம் மாவீரர்களுக்கும் படுகொலையான பல இலட்சம் மக்களுக்கும் நாம் செய்யும் வரலாற்றுக் கடமையுமாகும்.

இந்த, வரலாற்றுக்கடமையில் தமிழின உணர்வோடு ஒன்றிணைந்து, தேசியத்தலைவரின் சிந்தனையை எமது வழிவரைபடமாகக் கொண்டு, உறுதிமிக்க விடுதலைப்போராட்டத்தில் மக்கள் அனைவரும் இணைந்திட அழைத்துநிற்கின்றோம்.

இந்தவேளையில், தமிழீழத் தேசியத்தலைவருக்கு வீரவணக்கமென சிறுகுழுக்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும், தேசியத்தலைமையைக் கருவறுக்கும் சூழ்ச்சித்திட்டங்களை எழுச்சிகொண்டு

தமிழீழத் இனங்கண்டு,நாம்

அவற்றை

உடைத்தெறிந்து, இவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதோடு, “விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையை எமதாக்கி,தமிழீழம் என்ற இலக்கை நோக்கி வீறுகொண்டு பயணிக்க ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

பெல்சியம்.

​

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 7

தேசியத் தலைவரைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை; தடமோ எண்ணமோ என்றும் மாறுவதில்லை!

பேரன்பிற்குரிய பிரான்சுவாழ் தமிழீழ மக்களே!

தேசியத்தலைவரைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை! தமிழ்த்தாயின் வலி உணர்ந்தவர் தடமோ எண்ணமோ என்றும் மாறுவதில்லை!!

தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வை நடாத்தி, அவரை இறைவனாக்கி, வரலாற்று அத்தியாயம் ஒன்றை மூடி, அவர் ஏற்றிவைத்த தமிழீழத் தேசிய ஆன்மாவை அணைத்துவிட எம்மவரைத் தூண்டுவதும், இதற்குச் சமாந்தரமாக மறுமுனையில் அவர் குறித்த போலிகளை உருவாக்கி எம்மிடையே சஞ்சலங்களை ஏற்படுத்துவதும் வெளிச்சக்திகள் ஈழத்தமிழர்களுக்குள் ஊடுருவிச் செய்யும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகளே அன்றி வேறொன்றுமல்ல.

இவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் உடந்தையாகவேண்டாம்.

புறநானூற்றுச் சங்க காலத்துக்கும் அதற்கும் பின்னான சோழர் காலத்துக்கும் பின்னர் நெடுங்காலமாக ‘இதற்காகத்தான் காத்திருந்தோம்’ என்பது போல் காத்திருந்த தமிழர்களிடையே ‘வாராது வந்த மாமணியாக’ வரலாற்றுப் பிறப்பெடுத்து ஈழத் தமிழர்களின் இன உணர்வைச் சரியாக நெறிப்படுத்தி, அதைத் தனக்கும் அப்பால் சந்ததி சந்ததியாகப் பற்றிப் பரவச் செய்தவரும், உலகளாவிய தமிழர்களுக்குக் காலம் தந்த கைவிளக்காக விளங்குபவரும் எமது தேசியத் தலைவர் ஆவார்.

சாதாரணமனித வாழ்நாள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்.

அவ்வாறான தேசியத் தலைவரின் இருப்புப் பற்றிய கேள்விகளுக்கு அப்பால் தேசிய ஆன்மாவாக என்றும் விளங்கும் அவர் சரீர இறப்புக்கு அப்பாற்பட்டவர். மேற்குறித்த புரிதல் எமது மக்களிடம் ஆழமான ஒரு மனநிலையாகப் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

ஆனால், இந்த மனநிலையையும் இது சார்ந்த கருத்தியலையும் உடைக்க முற்படும் வெளிச்சக்திகள் ஒரு காலத்தில் அவரை உயிராக மதித்து நடந்த முன்னாள் போராளிகளிற் சிலரையும் செயற்பாட்டாளர்களிற் சிலரையும் காலப்போக்கில் தமது தேவைக்குத் திட்டமிட்டுப் பலியாக்கிப் பயன்படுத்துகின்றன.

அதேவேளை, இவர்களை வைத்து மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளின் ஆழமான பின்புலத்தை அறியாமல் தவறான எண்ணம் இல்லாதவர்களும் உணர்ச்சிவயப்பட்டு உள்ளீர்க்கப்பட்டுப் பலியாகிவிடும் இடர் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பலியாகுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த வேண்டுகோள் அறிக்கை வெளியிடப்படுகிறது.

தேசியத் தலைவருக்கு எம்மவரே குறைமுதிர்ச்சியாக நினைவேந்தல் செய்வது என்பது அவரை நினைவாக்கி, அவர் தொடர்பாக எமக்கிருக்கும் வரலாற்றுக் கடனை மடைமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகும். தொடர்ந்தும் எமக்கிடையே பிளவுகளை உருவாக்கி, கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் உள்நோக்கமும் இதற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 16 ஆண்டுகள் கடந்தும் அணையாது தொடரும் இனவெழுச்சியை மழுங்கடித்து, அதைத் திசைமாற்றி, மடைமாற்றம் செய்யும் சதிச் செயற்பாடுகளை சிங்கள பௌத்த பேரினவாத அரசும், அதற்குத் தொடர்ந்தும் முண்டுகொடுத்து வருகின்ற, குறிப்பாகத் தத்தமது கேந்திரநலன்களை மையப்படுத்தி, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீடித்துவரும் பிராந்திய, சர்வதேச அரச தரப்புகள் சிலவும் இவற்றின் உளவுப் பிரிவுகளும் இச்சக்திகளோடு பின்னிப்பிணைந்துள்ள தன்னார்வ வலைப்பின்னல்களும் இடைவிடாது அரங்கேற்றி வருகின்றன.

தாயகத்தில் இன அழிப்புப் போரின் இறுதிக் காலம் வரை நீடித்த எமது தேசத்தின் நிழல் அரசையும், அது சார்ந்த புலம்பெயர் கட்டுமானங்களையும் சீர்குலைப்பதற்கு பல உத்திகளை மேற்குறித்த தரப்புகள் கட்டவிழ்த்து வருகின்றன. ஒட்டுமொத்த ஓர் இனத்தின் ஈகம் தொடர்பான நீர்த்துப்போதல்களை எம்மவர்களைக் கொண்டே செய்து விடவேண்டும் என்ற தற்சிதைவு அரசியலையும் எம்மவரிடையே இவை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கோ, அல்லது தேசியத் தலைவரின் இருப்புப் பற்றிய ஆதாரமோ நம்பகத்தன்மையோ எதுவுமற்ற போலித்தனமான முன்னெடுப்புகளுக்கோ எழுந்தமானமாகப் பலியாகாமல் தமிழீழ இலக்கு நோக்கிய பயணத்தில் அடுத்தடுத்த மைற்கற்களை தேசியத் தலைவர் தந்துள்ள வழிநடாத்தலில் காலத்துக்கேற்ற போராட்ட வடிவ மாற்றங்களோடு உறுதியாக முன்னெடுக்க எம்மோடு தொடர்ந்து இணைந்திருக்குமாறு அனைவரின் கரங்களையும் இறுகப் பற்றியவாறு இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

எம் தேசியத்தலைவரின் பார்வையும், ஆசியும் என்றும் எம்மை வழிநடத்தும். அதனையே தேசியத் தலைவர் மீது அன்பும், பற்றும்கொணட் பல்லோபலட்சம் மக்கள் விரும்புகின்றார்கள். நாமும் பின் பற்றுகின்றோம்.

தலைவனைப் புரிந்தவர் என்றும் தடுமாறுவதில்லை. தமிழ்த்தாயின் வலி உணர்ந்தவர் தடமோ எண்ணமோ என்றும் தடுமாறுவதில்லை!

இதையே இன்றைய காலம் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

பிரான்சு.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 8
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 9

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு   – யேர்மனி  அறிக்கை ..

​சுவிற்சர்லாந்து நாட்டில் நிகழவிருக்கும் விளக்கேற்றல் நிகழ்ச்சியை உறுதியோடு புறக்கணிப்போம்.

அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய யேர்மனிய மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம்.

தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும் பேசவும் முற்பட்டால் ‘விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி’ என்பதையே அகமும் புறமும் உச்சரித்துக் கொள்கின்றது.வாழும் சித்தாந்தமாக ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இயங்கு விசையினை உயிர்ப்போடு வைத்திருந்து, வடிவங்கள் வேறாகியும் அடைந்துகொள்ளும் ஒரே இலட்சிய இலக்கான, தமிழீழம் நோக்கிய தெளிந்த செல்நெறியிலே உறுதி தளராது பயணிக்கும் தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரே திசைகாட்டியும், உந்தித்தள்ளும் சக்தியுமானவரே எமது தமிழீழத் தேசியத்தலைவர்.அவரது பேராளுமைகளையும், கோட்பாடுகளையும், குழிதோண்டிப் புதைத்து, அவற்றுக்கொரு முற்றுப்புள்ளியிட்டு, வரலாற்றின் நீட்சியிலே தொடரவிடாது இடைநிறுத்தி, எதிரியின் காலடியிலே சுருங்கிக் கிடந்து, அற்பங்களுக்கு அடிமையாகி, சுயதெளிவற்ற இனமாக ஆக்கிவிடுவதற்கு, காலத்திற்குக் காலம் எதிரியும் வல்லாதிக்க அரசுகளும் கைக்கொண்ட அனைத்து வகையான உக்திகளையும் தகர்த்தெறிந்து, உறுதியோடு வாழும் தமிழினத்தை மீண்டும் ஒருதடவை நிலைதடுமாறச் செய்யச் சமகாலத்தில் கையிலெடுக்கப்பட்டிருக்கும் கருவியே ‘விளக்கேற்றல்’ என்ற விசம் திட்டிய கூரிய முனைப்பாகும்.

தன்னார்வம் மிக்க இளையவராக சுய தெளிவோடு, மண்மீதும் மக்கள்மீதும் பேரன்பு கொண்டு நேசிக்கும் தீராத் தாகத்தோடும் நெஞ்சுரம் மிக்க ஓர்மத்தோடும் ‘பாதையைத் தேடாதே அதனை உருவாக்கு’ எனும் அறச்சீற்ற நாயகனாய்ப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்து, அதனை அடக்குமுறைகளால் அவமானங்களால் இழிநிலை பெற்றிருந்த தமிழ்த்தேசிய இனத்திற்கான பலம்மிக்க அச்சாணியாகத் திகழ்ந்து, சொல்லுக்கு முன்னே செயல்களால் மக்கள் மனங்களிலே செல்வாக்குப் பெற்று, தன்னை மாத்திரமல்ல ஒட்டுமொத்தத் தமிழினத்தையே தலைநிமிரச் செய்து, பூமிப்பந்திலே தமிழீழம் என்ற நிலைபெறு அடையாளத்திற்கு ஆன்ம விழிப்புக்கொடுத்து, முப்படைகளையும் கட்டிவளர்த்து மதிநுட்ப வழிகாட்டியாக இன்றும் திகழும் பொற்காலப் பிதாமகனைத் தமிழ்த்தேசிய ஆன்மாவிலிருந்தும் எமது மக்களின் இதயத்துடிப்பிலிருந்து ஓரமாக்கிவிட எதிரி காணும் கனவுகள் ஒருபோதும் பலிக்காது. கூலிக்காய் ஏவலானவர்களைத் தமிழினம் என்றும் மதிக்காது, மன்னிக்காது தமிழீழம் என்ற உச்சத்திலே ஒளிரும் ஒளிக்கீற்றை யாரும் மூடிவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது,கெரில்லா முறைமையிலே ஆரம்பிக்கப்பட்டு, படிமுறை வளர்ச்சிகளால் பலம்பெற்று, மாற்றலாகி, மரபுவழி இராணுவமாகக் கட்டிவளர்க்கப்பட்டு, தமிழீழ நிழலரசின் தோற்றுவாயிலே இராணுவ, அரசியல், இராசதந்திர சமநிலை பேணப்பட்டு, அத்தனை வெற்றிகளின் நாயகனாகத் திகழ்பவரே எமது தேசியத்தலைவர். தமிழ்த்தேசிய இனத்திலே பிறந்த ஒவ்வொருவருக்கும் சம உரிமைகொண்ட எக்காலத்திற்குமுரிய தேசியத்தலைவரை, நாமே போராடிய சமூகம், எமக்கே தேசியத்தலைவர் உருத்துடையவரென ஒரு குழுமத்தினரும் நாங்களே அவரது நெருங்கிய உறவினர்கள், எமக்கே அவர் சொந்தமானவரென இன்னொரு சாராரும், நாமே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் வரலாற்று இயக்கத்தின் அதிமுக்கிய துறைகளில் வாழ்ந்தோம் ஆதலால் எமக்கே முதற் தகமையுண்டு என மற்றுமொரு சாராருமாக, முண்டியடித்துக்கொண்டு, மாபெரும் வரலாற்றின் இமாலய சக்தியை ஒற்றைச் சிறிய புள்ளியோடு அடைத்து, பல தடவைகளாக விளக்கேற்ற முற்பட்டுத் தோற்றுவிட்ட பிறகும் அவ்வாறு முற்பட்டவர்கள் யாருமே சமூகப்பரப்பிலே முகம் காட்ட முடியாதவர்களாக, வெட்கித் தலைகுனிய மக்கள் கொட்டித் தீர்க்கும் கோப வார்த்தைகள் செவிப்பறைகளைக் கிழிக்க, மேலும் மேலும் புதிய கற்பிதங்களைத் தேடிக் கண்டுபிடித்து, மக்களின் மனவெளி நோக்கி வலிந்து திணிக்க முற்படுபவர்களே சமகாலப் பொய்க்கால்க் குதிரைகள்.இது தொடர்பில்,தெளிந்த நோக்கும் வற்றாத ஓர்மமும் கொண்டுள்ள எமது மக்களால் இவர்களும் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இப்படியான தரப்புக்களைப் போலவே இன்னுமோர் தரப்பினர், தேசியத்தலைவர் அவர்களும் அவரது மகளும், அத்தோடு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும் இதோ வருகிறார்கள், பொருளாதார உதவிகளைக் கோருகின்றார்களென மிக அற்பத்தனமான போலிப்பரப்புரைகளை விதைத்தபடி, நிதிமூலங்கள் நோக்கிய ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றி வருகின்றார்கள். விளக்கேற்றவென ஒரு குழுவும், இருப்போர்க்கு நிதிசேர்க்க இன்னோர் குழுவுமாக ஆகமொத்தத்திலே, தேசியத்தலைவரின் மகிமையையும் மாண்பையும் பங்குபோட்டு அழிப்பதனைக் கையிலெடுத்திருக்கும் இவர்களது போக்கினைத் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த தேசங்களிலே வாழும் தமிழ்மக்கள் நன்கு அறிந்து தெளிந்தே உள்ளார்கள். இந்நாசகாரக் குழுக்கள்,நெஞ்சிலே குத்துவதும் முதுகிலே குத்துவதும் தமிழீழத் தேசியத்தலைவரை அழித்தேவிட வேண்டுமெனும் உண்மையான மனநிலையை புலப்படுத்துகிறது.

வினாடிப் பொழுதுகளையே நனகு திட்டமிட்டு, நுண்ணிய இலக்குகளை வென்று கரைசேரக் காத்திருந்து, உலகே வியந்து நோக்கிய இமாலய சாதனைகளை ஈட்டிய வரலாற்று இயக்கத்தின் வழிவந்த இனமான நாம், மே 17,18,19 ஆகிய நாட்களிலே எது சரியானது என்பதைக் கண்டறியக் கடந்த பதினாறு வருடங்களாகத் திண்டாடுவதைக் காண்கின்றோம். உரத்துக் குரலெடுத்து ஒலமிட்டு அழுதால், சுற்றாடல் முழுவதுமாகக் கேட்கும் குறுகிய நிலப்பரப்பான முள்ளிவாய்க்கால்ப் போர்க்களத்திலே இறுதி நாளென்பது எதுவெனவும், என்னதான் நிகழ்ந்ததெனத் துல்லியம் தெரியாத கற்பனைக் கதை வளர்ப்போரையே திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் உரையாடல்களிலும் தற்புகழ்ச்சியில் மிதக்கக் காண்கின்றோம். இங்கும் மேதகு சித்தாந்தமே நீட்சி பெறுகின்றது. யாரும் முற்றுப்புள்ளியிட முடியாத சூரியப் புதல்வனை நோக்கி, ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனமும் நிதானம் கொள்ளும்வரை சில்லறைத்தனமானவர்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள், நுனிப்புல் மேய்ந்தோரால் ஊடகங்கள் நிரம்பி வருமானப் பெருக்கம் நிகழலாம். இருப்பினும், எதிரி காணும் கனவுகள் யாவும் அறச்சீற்றப் பாதங்களால் மிதிபட்டே போகும்.

போரும் போர்சூழ்ந்த வாழ்வுமாக தம்மையே அர்ப்பணித்து, அவயங்கள் அறுபட்டு இருள்சூழ்ந்து கிடக்கும் தாயக உறவுகளின் மீள் வாழ்விற்கோ, அரசியலின் பெருத்த வெளியிலே குந்தியிருக்கும் தமிழினத்தின் நியாயாதிக்கத் திசைக்கு ஒரு துரும்பையேனும் கடந்த பதினாறு வருடங்களாக எடுத்துப் போடாது, சுகபோகங்களுக்குள்ளே கட்டுண்டு கிடந்தபடி, பொருளாதார இலக்குகளிலே மட்டும் கடைக்கண் செலுத்தி, புலம்பெயர்ந்த தேசங்களிலே எஞ்சியுள்ள கட்டமைப்புகளைச் சிறுமைப்படுத்திக் குழுநிலைகளை உருவகித்துக் கிடந்தவர்கள், திடீரென விழிப்படைந்தவர்களாக இயங்கும் சமகாலத் தேவை எதனாலெனும் சந்தேகம் மேலோங்குவதைத் தவிர்க்கமுடியாது.நான்கு சுவர்களுக்குள்ளே ஒளிந்திருந்து, நவீன இலத்திரனியல் உருவகங்களால் எதிரியின் சிந்தனைக்கு முதன்மையளித்து, விளக்கேற்றிவிட விரும்பியதைப் பேசுவோர் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டப்படுகின்றீர்கள்.நீங்கள் ஏற்றத்துடிக்கும் தம் விளக்கிலேயிருந்துதான் தலைவரது மாண்பு பலபடி உயரப்போவதுமில்லை. நீங்கள் ஏற்றாது இரண்டறக் கலந்து இன்றும் வாழும் சித்தாந்தமே மேதகுதான். எங்கு சுமக்க வேண்டுமெனவும், எப்படிச் சுமக்க வேண்டுமெனவும் தெளிவோடுள்ளவர்கள் மக்கள். தேசியத்தலைவர் காட்டும் இலட்சியத் திசை நோக்கித் தமிழினம் வெற்றிநடை போட்டு இலக்கினை எட்டும்வரையும் எட்டிய பின்னரும் அவரேதான் தமிழினத்தின் வழிகாட்டி.

மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களுடைய கூற்றிலிருந்து: ‘பிரபாகரன் என்பது ஒரு தனிமனிதரது பெயரல்ல. அது ஒரு கொள்கையாக மலர்ந்து நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை, தமிழ் மக்களின் வாழ்வு, தமிழ் மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் இலட்சியம் இத்தனையும் அந்தப் பிரபாகரன் என்ற பெயருக்குள் அடக்கம்’ இந்த அடையாள அடைவுகளை யாரும் தான்தோன்றித்தனமாக முற்றுப்புள்ளியிட்டுக் கடந்து செல்ல முடியாது.

அன்பான எமது மக்களே!

சிங்களப் பேரினவாத அரசும், தம்நலன்பேண் வல்லரசுகளும் நினைப்பதுபோல், தமிழீழத் தேசியத்தலைவரது வாழ்வியலுக்கு முற்றுப்புள்ளியை இட்டுவிட்டால், தாம் விரும்பும் தமக்குச் சாதகமான ஒருவரைத் தமிழினத்தின் தலைமைத்துவம் நோக்கி நகர்த்தலாம். நகர்த்தப்படும் யாரோ அந்த வெற்று மனிதரைக் கேடயமாக வைத்து, தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதியாக உலகிற்கு ஒப்புதலளித்து, தாம் நினைப்பதை எழிதில் அடைந்துவிடலாமெனக் கனவு காண்கின்றது. அந்த அடைவின் மூலமாகத் தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு பிரச்சினையே இல்லை என்பதனையும் இலங்கைத்தீவிலே மூவின மக்களும் கூட்டிணைந்த சமத்துவம் கட்டி வளர்க்கப்படுவதான ஒரு போக்கினை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். ஆயிரமாயிரம் தியாகத் திரட்சிகளை நீர்த்துப்போகச் செய்யும் நயவஞ்சக எண்ணங்களுக்குத் துணைபோகும் வீணர்களைத் துரத்தியடிப்போம்.

மே 19 அன்றுதான் தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பதை மறைமுகமாக உட்பதிவாகவும், மே 18 அன்றுதான் வீரச்சாவடைந்தாரென வெளிப்பதிவாகவும் பதிவேற்றம் செய்துள்ள குழுக்கள், மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளாகப் பிரகடனப்படுத்தி, நினைவேந்தி நீதிகோரும் நாளை நீர்த்துப்போகச்செய்து, எதிரியின் எண்ணமான மே 18 ல் நிகழ்ந்தது தமிழின அழிப்பல்ல அது புலிப் பயங்கரவாதிகளை அழித்து வென்ற நானென்பதை எம்மையே சாட்சியாக வைத்து நிறுவுதலின் மூலமாகத் தமிழ்த்தேசிய இனம் உலக நீதியின் முன்னே தொடுத்திருக்கும் நீதி கோரலைத் தடுத்துவிடலாமெனப் பகற்கனவு காண்கின்றது. அறமும் சத்தியமும் எமது பக்கம் நிலைத்திருக்கும்வரை தமிழினத்தின் நீதிகோரல் இடைவிடாது தொடரும்.மாறாக வரலாற்றுத் தவறுகளை உருவாக்கி, அதனை அடைந்துவிடத் துடிக்கும் அற்பர்கள் மறைந்துபோவார்கள். தமிழீழ மண்ணிலே முளைவிடும் ஒரு சிறு புற்கூட இந்த அற்பர்களை மதிக்காது.

உயிரிலும் மேலான உறவுகளே விழிப்படைவோம்!

கடந்த பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகப் புலம்பெயர் தேசங்களிலே, தமிழீழத் தேசியத்தலைவரது எண்ணங்களால் நிமிர்ந்தெழுந்த கட்டமைப்புகளைச் சீர்குலைக்கவும், மரபு வழியாகக் கட்டிக் காக்கப்பட்ட மாவீரர் வணக்க நிகழ்வின் அடையாளங்களை மாற்றியமைத்தும், மக்களை ஓர் அணியத் திரட்சிக்குள் தரித்து நிற்கவிடாது. பல்வேறுபட்ட குழப்பங்களை உருவாக்குவதும் விடுதலைப்பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் மீது, அவதூறுகளை அள்ளிவீசுவதுமாக தம்மை ஈடுபடுத்தினார்கள்.உயிர்களைக் காவுகொள்ளும் தீய வழிமுறைகள்வரை நீண்டிருந்த எதிரியின் நிகழ்ச்சிநிரலை எமது உயிரிலும் மேலான உறவுகளின் விழிப்பே இன்றுவரை காக்கும் ஆயுதமாக இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியில் இப்போதும் சரியான முடிவுகளை எடுத்துக்கொள்வோம். துரோகங்களுக்கும் சவால்களுக்கும் எதிராக தெளிந்த உறுதியோடு விழிப்பால் காப்பரண் அமைத்துநிற்போம்.

தமிழீழத் தேசியத்தலைவர் காட்டும் வழிதன்னில் எமது சுதந்திர இலக்குநோக்கி இடைவிடாது பயணிப்போம், தமிழீழம் என்ற இலக்கினை வென்று அந்த வெற்றிக்களிப்பிலே அசைந்தாடும் தமிழீழத் தேசியக் கொடியின் ஒளிக்கீற்றில் துலங்கும் புதிய பரிணாமங்களிலிருந்து தேசியத்தலைவரின் சிந்தனை தொடர்ந்தும் சுதந்திர தேசவாழ் ஈழத்தமிழ் மக்களையும் வழிநடாத்தும். ஆகஸ்ட் 02 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாட்டிலே நிகழவிருக்கும் விளக்கேற்றல் என்ற நிகழ்ச்சியை உறுதியோடு புறக்கணிப்போம்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 10
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 11

நெதர்லாந்து 19.07.2025​

அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே!

தமிழீழம் என்ற விடுதலை இலக்கினைச் சிதைக்கும் விளக்கேற்றல் நிகழ்வைப் புறக்கணிப்போம்!

எமது தமிழீழ மண்ணிலே அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புக்களும்  மற்றும் படுகொலைகளுமென,சிறிலங்கா சிங்கள இனவாரத அரசினால் திட்டமிட்ட முறையில் தமிழ்மக்களிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில்,இதற்கெதிராக அறவழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் அதற்கான தீர்வுகளோ அன்றி அமைதியான சூழலோ ஏற்படுத்தப்படாத சூழமைவில், எம்மக்களையும் மண்ணையும் காப்பாற்ற எழுச்சி கொண்டெழுந்ததே எமது தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். உலகமே வியந்து நின்ற, உன்னத தியாகங்களின் வழியே, எம் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழிநடாத்தியவர் எமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களே. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சிற்பியும் விடுதலைச் சித்தாந்தமும் சித்தாந்தமும் அதன் இயங்குவிசையும் அவரே.எமது தேசியத்தலைவரின் சிந்தனையின் வழிநின்று விடுதலைப்பயணம் இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தேசியத்தலைவரின் சிந்தனையைச் சிதைத்து, தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய விடுதலைப்பயணத்தை அழிப்பதை நோக்கமாகக்கொண்டு சிறு குழுக்கள் சில ஆண்டுகளாக திட்டமிட்டு நாசகாரச்சக்திகளினால் புலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செய்து போராளிகளினதும், மக்களினதும் உளவுரணைச் சிதைத்து, விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை இல்லாதொழிக்கவே சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசும் வல்லாதிக்க சக்திகளும் கடும் பிரயத்தனம் செய்து வருகிறனர். எமது தேசியத்தலைவருக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்யும் நிகழ்வானது தெளிவற்ற முடிவுகளுக்கு மத்தியில் குறிப்பிட்ட குழுவினரால் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வீரவணக்கம் செய்யும் நாட்களிலேயே தடுமாற்றம், மே 17,18,19 என பல தரப்புகளால் அறிவிப்புக்களைச் செய்து, மக்கள் மத்தியில் குழப்பமான சூழலை உருவாக்கி, சிறுபிள்ளைத்தனமான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளமை அருவருக்கத்தக்க விடயமாகும்.

எதிரிகளின் நிகழ்ச்சித்திட்டங்களோடு களமிறங்கியுள்ள இக்குழுக்களின் தேசியத்தலைவருக்கான விளக்கேற்றல் என்னும் சதித்திட்டத்தை இனங்கண்டு, அதனை முறியடித்துத் தமிழீழ மக்களனைவரும் அதனைப் புறக்கணிக்கவேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். வருகிறார்”* தேசியத்தலைவர்  வருகிறார் என ஒரு தரப்பும் *”தேசியத்தலைவருக்கு விளக்கேற்றல்”* என  மறுதரப்பம்  இணைந்து  தமிழீழ விடுதலைச்சித்தாந்தத்தை சிதைத்து, விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியினை முன்னெடுக்க யாரும் முன்வரக்கூடாதென்பதைத் தூரநோக்குப் பார்வையாகக் கொண்டு, தமிழீழம் என்ற விடுதலை நோக்கிய இலக்கினை அழித்து, தேசியத்தலைவருக்கான வீரவணக்கமும் தேசியத்தலைவரின் வருகையும் என்ற இருமுனை முலோபாய நாசகார நகர்வுகளை .எதிரிகள் முன்னெடுத்துள்ளனர். இச்சூழலில், இதனைத் தெளிவாக மக்கள் புரிந்துகொண்டு, வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையே, எமது விடுதலை வழிகாட்டி என்பதை உளமார ஏற்று, எமக்காகத் தம்முயிரைஈந்த மாவீரர்களின் ஈகங்களின் வழிநின்று,  எத்தடைவரினும் அத்தடை உடைத்து, தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனை வழியே தொடர்ந்தும் போராடுவோம் *என உறுதிகொள்வோமாக!

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

நன்றி.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம். 12
பகிர்ந்துகொள்ள

Leave a Reply