ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக நெதர்லாந்துக் கிளையினால் ஆரம்பிக்கப்பட்ட இம் மனித நேய ஈருருளிப்பயணமானது 30.8.2024 வெள்ளி அன்று நெதர்லாந்தின் டென்ஹாக் மாநகரத்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது நாளாக தொடரும் இந்த ஈருருளிப் பயணமானது தமிழின உணர்வாளர்கள் உற்சாகத்துடனும் உறுதியுடனும் பயணிக்க பிரைடாமாநகரசபையிலிருந்து புறப்பட்ட இந்த ஈருருளிப்பயணம் பெல்சியம் எல்லைவரை பயணித்து பெல்சியம் கிளையிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து
பெல்சியத்தில் 03.09.2024 நேற்று காலை 9 மணியளவில் நாமன்(namen)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்து தனது இலக்கை நோக்கி பயணித்து
இன்றைய நாளில் 04.09. 2024 இன்று காலை9மணியளவில் Bastogne என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து uxemburg நோக்கிப் பயணித்து luxemburg நகரத்தில் அமைந்துள்ள
வெளிவிவகார அமைச்சினைச் சென்றடைந்து,luxemburg
வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் மனுக்கையளிக்கப்பட்டது.தற்போது ஐரோப்பிய நீதிமன்றை நோக்கிப் பயணித்து அங்கும் மனுக்கைளிக்கப்பட்டு, தொடர்ந்தும் ஜேர்மனி நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் 57 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும், அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள்.
“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.







