தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து…

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அா்த்தம் இருக்கிறது ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்

உமது படிப்பையும் வேலையும் ஒரு வேலைக்கூரிய கடமையாகச் செய்யாமல் அதற்கு முமு அர்த்தம் கொடுக்கக் கூடிய மாதிரியாக செய்க

நான் உல்லாச விரும்பி அல்ல அது என் இயல்பு அல்ல உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் அஃது என்னால் முடியாது

அறிவும் வயதும் அனுபவமும் உயர்வும் கிடைக்கும் பொமுது நாம் பணியவேண்டும் பணிவு என்பது உலகையும் மக்களையும் புரிந்துந்துகொண்டு அவர்களுக்காக உழைத்தல் என்பதையே குறிக்கும்.

சிந்தனையில் எளிமையாக வாழவும் மனித சேவையும் எப்பொமுதும் முக்கியமாகக் கருத வேண்டும்
மூலம் -தமிழீழ ஆவணக்காப்பகம்https://tamileelamarchive.com/