துப்பாக்கி முனையில் மிரட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்!

You are currently viewing துப்பாக்கி முனையில் மிரட்டி காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்!

வல்வெட்டித்துறை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வல்வெட்டித்துறை பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் சகோதரன் ஒருவன் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் பின்னர் சனி இரவு 7:45 மணியளவில் குறித்த முறைப்பாட்டாளரின் எதிராளிகளை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று அழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

​இதில் குலசேகரம் மிதுலன் (வயது- 24) என்பவரது அந்தரங்க பகுதியில் காவல்துறையினர் மிதித்தாக தெரிவித்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.​

மேலும் அப்புக்குட்டி வசந்தன் (40 வயது) என்பவர் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காது காவல்துறை தடுப்புக் காவலில் தொடர்ந்தும் வைத்திருந்தனர்.

இந்நிலையில் உறவினர்கள் யாழ். மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து அவரும் நேற்று காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடாத்திய இரண்டு காவல்துறையினரும் குறித்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறை பொறுப்பதிகாரியிடம் முறையிட கபில் மற்றும் உதயகுமார் என்று சொல்லப்படும் சிங்கம் 2 ஆகிய இருவரும் தடுத்துள்ளனர்.

​நேற்றிரவு சிங்கம் 2 என்று பெயர் குறிப்பிட்ட உதயகுமார் அங்கு துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், சுவரில் முகத்தை மோதியதாகவும் இது சிங்கம் 2 இன் அடி என்றும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.​

இன்று அதிகாலையில் தங்களை தாக்க வந்ததாக கூறி வல்வெட்டித்துறை காவல்துறையினர் கைது செய்த நபரான குலசேகரம் என்பவரை வல்வெட்டித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

அதில் அவரது கண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எந்த விதமான சிகிச்சையும் வழங்காது நீதிமன்ற உத்தரவு பெற்று தடுப்பு காவலிற்கு அனுப்பி உள்ளதாகவும் வல்வெட்டித்துறை காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் உறவினர்கள் தெரிவிக்கும் அதே வேளை காவல்துறையினர் ஒரு பக்க சார்பாக செயற்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments