
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் தமிழீழ விடுதலைக்காக பல பாடல்களை எழுதியவரும் கொண்ட கொள்கையில் பற்றுதிகொண்ட வரும் அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை
அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார்.
மறைந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்களுக்கு தமிழ்முரசம் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றது.