உச்ச கட்ட துரோகம் அரங்கேறியதுதமிழ்த்தேசிய முண்ணனி தவிர்ந்த பிற தமிழ் கட்சிகளால் , 13ஆம் திருத்தச்சட்டத்தை தமிழ்மக்களிற்கான தீர்வாக முன்வைத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது தமிழ் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேக்ஷ் பிரேமசந்திரன், சுமந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.நேற்று 18- 01-2022 இந்திய ஒன்றிய பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்தியத் தூதுவரிடம் இல்லத்தில் சம்பந்தன் தலைமையில் கையளிக்கப்பட்டதாகவும்தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக இவ்விடயம் கருதப்படுவதாக தமிழ்த்தேசிய முண்ணனி தவிர்ந்த பிற தமிழ் கட்சிகளால் கூறப்பட்டாலும் இது தமிழ் மக்களுக்கும் தமிழர்களின் இருப்புக்கும் துரோகமிழைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர்.
தமிழீழ வரலாற்றில் நேற்று நடந்த உச்ச கட்ட துரோகம்!
