தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தை அழித்தொழிக்கும் உளவியல் யுத்தம்!!

You are currently viewing தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தை அழித்தொழிக்கும் உளவியல் யுத்தம்!!

சிங்களப் பெளத்த பேரினவாத அரசின் சனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் மறைமுகமான தமிழீழம் மீதான நாசகார ஆக்கிரமிப்பு யுத்தம் , தமிழீழப் பகுதியிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் சிறிலங்காவின் விசேட புலனாய்வுக்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வழிநடத்தலில் நடைபெற்று வருகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், தமிழீழ மக்களின் உள்ளார்ந்த சுயமரியாதையும் விடுதலைச் சித்தாந்த நம்பிக்கையும் அழியவில்லை.
ஆனால் இன்று, “அமைதி” என்ற பெயரில், அனுரகுமாரவின் தலைமையிலான சிங்கள JVP அரசு, தமிழீழ சிந்தனையை மக்களின் மனங்களில் இருந்து முழுமையாக அழிக்கும் உளவியல் யுத்தம் ஒன்றை நடத்தி வருகிறது.
இது போர்க் கருவிகள் தளபாடங்களைக் கொண்டு நடாத்தப்படும் யுத்தம் அல்ல. கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய புலனாய்வுப் போர்.
இது தியாகங்களையும், வீர வரலாறுகளையும், நினைவுகளையும் அழிக்கும் உளவியல் போர்.”

தமிழர் தாயகப் பகுதிகள் இன்னும் சிறிலங்காஇராணுவஅடக்குமுறையின் கீழேயே நிர்வகிக்கப்படுகிறது.
சிறிலங்கா அரசு “போர் முடிந்தது” என்று சொன்னாலும், அந்த அமைதி அச்சத்தின் நிழலில் திகழ்கிறது.
தமிழ் அரசியல்வாதிகள் “சுயநிர்ணயம்” அல்லது “விடுதலை” பற்றி பேசினால் உடனே “தீவிரவாத ஆதரவு” என குற்றம்சாட்டப்படுகின்றனர்.
இதன் நோக்கம் — தமிழீழ விடுதலை அரசியல் குரலை நசுக்கவும், மக்களிடையே தன்னம்பிக்கையை சிதைக்கவுமாகும்.

தமிழ் பாடப்புத்தகங்களில் இருந்து தமிழீழ வரலாறு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தமிழர் மாவீரர்களின் வடிவரலாறுகள், போராட்டத்தின் நியாயப்பாடுகள் — அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
பதிலாக, “ஒரே தேசம், ஒரே வரலாறு” என்ற சிங்கள பேரினவாத தேசியக் கோசம் ஊட்டப்படுகிறது.

*ஒரு இளம் தலைமுறை தங்கள் வரலாற்றை அறியாமல் வளரும்போது,
அவர்கள் சுதந்திரத்தைக் கோரும் வலிமையையே இழந்து விடுவர்*

சிறிலங்கா அரசினால் தமிழர் பண்பாட்டு அடையாளத்தின் மீது மென்மையான உளவியல் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

தமிழீழ மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றனசில இடங்களில் “அரசு நினைவிடங்கள்” என மடை மாற்றப்படுகின்றன.
வீரமரபு சிறிலங்கா அரசின் நிர்வாக நிகழ்வாக” மாறுகிறது.
அதேசமயம் சிங்கள ஊடகங்கள் வடக்கில் ஊடுருவி, தமிழ் இளைஞர்களின் மனப்பான்மையை மெதுவாக மாற்றுகின்றன.
தமிழ் கலை, இசை, நாடகம், இலக்கியம் ஆகியவற்றில் அரச ஆக்கிரமிப்பு கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
“தமிழீழம்”, “தலைவர் பிரபாகரன்”, “விடுதலை” என்ற சொற்களே இப்போது பயங்கரவாத சந்தேகத்தின் அடையாளங்களாகி விட்டன.
தமிழர் தாயக நிலங்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழே இருக்கின்றன.
தமிழர்கள் தங்கள் சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
அதற்குப் பதிலாக, புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன, சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இது வெறும் மத ஆக்கிரமிப்பல்ல — மக்கள் அமைப்பை மாற்றும் அரசியல் திட்டம். *“ஒரு நிலத்தை ஆக்கிரமிப்பது எளிது;
ஆனால் விடுதலை வேண்டிநிற்கும் மக்களின் அடையாளத்தை மாற்றுவது மிகவும் கடினமாகும். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் புடம்போடப்பட்ட மக்கள் திரட்சியைத் தொடர்ந்து அடக்குமுறைக்குள் வைத்திருப்பது சாத்தியமற்றது.

சிறிலங்கா அரசு ஊடகங்கள் தமிழீழப் போராட்டத்தை “பயங்கரவாதம்” என சித்தரிக்கின்றன.
சிங்கள இராணுவ த்தினர் “தேசிய வீரர்கள்” என மகிமைப்படுத்தப்படுகின்றனர்.
தமிழ் ஊடகங்கள் மீது வழக்குகள், தடைச் சட்டங்கள், அனுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் தமிழீழ ஆதரவு பக்கங்கள் அடிக்கடி முடக்கப்படுகின்றன.
இதன் மூலம் மக்கள் மனங்களில் தமிழர் போராட்டம் தவறு என்ற உளவியல் குற்ற உணர்வை உருவாக்க முயல்கின்றனர்.

தமிழீழ விடுதலைச் சிந்தனையை “பயங்கரவாதச் சிந்தனை” எனக் குற்றம்சாட்டி,
சர்வதேச அரங்குகளில் அதன் நியாயத்தன்மையை புறக்கணிக்க முயல்கின்றனர்.
இதன்மூலம் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் இளையோர்களும் தங்கள் அடையாளக் கோரிக்கையை, தன்னம்பிக்கை இழந்து கைவிட்டுவிடுவார்கள் என சிங்கள தேசம் மனப்பால் குடிக்கின்றது.
பேரினவாதச் சிந்தனையில் தமிழர்களை சித்தாந்தரீதியாகத் தோற்கடிக்க சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாகச் செயல் படுகிறது.

*JVP யின் அனுரகுமார அரசு நடாத்தும் இந்தப் புதிய உளவியல் போர் துப்பாக்கி இல்லாமல் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தை அழிக்கும் ஒரு புலனாய்வு யுத்தம்.
இது கல்வியில், ஊடகத்தில், கலாச்சாரத்தில், பொருளாதாரத்தில், நில அபகரிப்பில், நினைவேந்தல்களில் நடக்கும் மென்மையான நுணுக்கமான ஆக்கிரமிப்பாகும்*.

* “தமிழீழம் ஒரு நிலத்தின் பெயர்அல்ல;
அது ஒரு சித்தாந்தம், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனை, மாவீரர்களின் இலட்சிய தாகம். ஒரு உயிர் ஓசை.” தேசிய ஆன்மா அதனை அழிந்துபோக தமிழர்கள் எப்போதுமே விடமாட்டார்கள் தொடர்ந்தும், விடுதலை அடையும்வரை போராடுவார்கள்.

அதனால், சிங்கள அரசின் புலனாய்வு,உளவியல் யுத்தம் வெற்றி பெறாது படுதோல்வியிலேயே முடியும். ஏனெனில் தமிழீழ விடுதலைச் சித்தாந்தம் ஒரு தலைமுறை அல்லது ஒரு போராட்டத்தின் சொத்து அல்ல;
அது தமிழர் உயிரின் நிழல், அழியாத சிந்தனை ஒளி. தொடர்ந்தும் வெளிச்சம் தரும். -அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply