தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பதில் கூறவேண்டும்!

You are currently viewing தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பதில் கூறவேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி ராணுவத் தளபதியோ அரசோ பதில் கூறவேண்டிய தேவையில்லை, பதில் சொல்ல வேண்டியவர் மாவையும் TNA யும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பதில் கூறவேண்டும்! 1

தேர்தல் நெருங்கி வருவதால் மாவை தனது வேசத்தை மாற்றுகிறார்.

இலங்கை இராணுவம் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கமோ இனப் போரின்போதும் அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட தமிழர்களைப் பற்றி ஆராயாது என்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கும், பல சக்தி வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கும், தமிழர்களுக்கும் மற்றும் மனிதநேய ஸ்தாபனங்களுக்கும் ஸ்ரீலங்கா சிங்கள தலைவர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் இன்பத்து தான் உண்மை.

இதனால் சிங்களவர்களிடம் எமது காணாமல் ஆக்கப்பட்டோர் விடையம் பற்றி கேட்பது அர்த்தமற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பதில் கூறவேண்டும்! 2

மாவை மற்றும் அவரது TNA எம்பி நண்பர்கள் கடந்த 11 ஆண்டுகளாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருபோதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த கேள்வியையும் எழுப்ப மறுத்தனர். குறிப்பாக இலங்கைக்கு உதவும் நாடுகளுடன் கூட கேட்க மறுத்தார்கள்.

கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றத்தை பாதிக்கும் என்பதால், அதிகாரம் உள்ள நாடுகளை அவர்கள் கேட்க விரும்பவில்லை. மாவை மற்றும் அவரது நண்பர்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் செய்தால், ஸ்ரீலங்காவால் கொடுக்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் இழக்கப்படும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே பதில் கூறவேண்டும்! 3

திரு. சம்பந்தன் காணாமல் ஆக்கபட்ட தமிழர்களின் இந்த உறவினர்களிடம் சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று கூறி தமிழர்களை அவமதித்து கூறியபோது உதயன் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார் என்பவை சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் பார்த்திருந்தோம்.

எனவே வரும் இந்த தேர்தலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் நன்றாக தெரியும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலைநகரங்களுக்கு பயணிக்கக்கூடிய இளம், தர்க்கரீதியாக விவாதிக்கக்கூடிய, வழக்கறிஞர்கள், பேசக்கூடியவர்கள், துணிந்தவர்கள், உலக அரசியல் தெரிந்த, ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடியவர்கள், முன்னே தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் வாழும் , கொசோவோ, கிழக்கு திமோர், போஸ்னியா போன்ற நாடுகள்அரசியல் போராட்டம் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு வாக்களியுங்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்க கூடிய வழிமுறைகளை உலகத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தி கூறக்கூடிய தமிழ் தலைவர்கள் எமக்குத் தேவை.

மேலும், இந்த இளம் வழக்கறிஞர்கள் தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தின் தேவைக்காக,
சரியான காரணங்களுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யு.என்.எச்.ஆர்.சி உறுப்பு நாடுகளை இணங்க வைக்க கூடிய விவாதம் வைக்க கூடிய தமிழ் தலைவர்கள் எமக்கு இத்தேர்தலில் நிச்சயம் தேவை.

மாவை மற்றும் அவர்களின் நண்பர்களை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பினால் தமிழர்கள் 5 வருடத்தில், நல்லாட்சி என்ற பெயரில், இருந்த இடமே தெரியாமல் போகலாம்.


செயலாளர் கோ.ராஜ்குமார்

பகிர்ந்துகொள்ள