தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை தீவிரம் கணிசமாக குறைவடைந்து வரும் நிலையில் நாளாந்த தொற்று மற்றும் மரண எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து வருகின்றது.
நேற்று (ஜூலை-09) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 39 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக,
கோயம்பத்தூரில் – 349 பேர்
ஈரோட்டில் – 230 பேர்
சேலத்தில் – 191 பேர்
சென்னையில் – 180 பேர்
தஞ்சாவூர் – 179 பேர்
திருப்பூரில் – 176 பேர்
செங்கலர்பட்டு – 156 பேர்
திருச்சி – 121 பேர்
நீலகிரி – 103 பெர்
ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 25,13,098 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 322 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 33,224 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.