தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பாதிப்பு மெல்ல மெல்ல குறைவடைந்து வரும் நிலையில் நேற்றைய தினம் மேலும் 3211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (ஜூலை-08) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 211 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக,
கோயம்பத்தூரில் – 366 பேர்
ஈரோட்டில் – 251 பேர்
சேலத்தில் – 205 பேர்
தஞ்சாவூர் – 190 பேர்
சென்னையில் – 189 பேர்
திருப்பூரில் – 185 பேர்
ஆகிய மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 25,10059 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 33,665 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.