தமிழ்முரசம் ஆண்டுதோறும் நடாத்திவரும் திரையிசைப்பாடல் போட்டிகள் தமிழ்முரசத்தின் வெள்ளிவிழா ஆண்டின் பொன்மாலைப் பொழுது நிகழ்விலும் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்து 09.04.22 அன்று மூன்று பிரிவுகளாக(இளம்செல்லக்குயில் செல்லக்குயில் வானம்பாடிகள்) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 போட்டியாளர்கள் மொத்தமாக 15 போட்டியாளர்கள் சிறப்பாக தங்கள் பாடல்களை பாடி மண்டபம் நிறைந்த மக்களின் மனதினை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள்.
மக்களின் வாக்குகளாலும் நடுவர்களின் புள்ளிகளாலும் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் அத்தோடு கடுமையான போட்டிகளை கொடுத்து மற்றவர்களும் அசத்தியுள்ளார்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும் போட்டிகளில் பங்கெடுத்து உங்களை வளர்த்துக்கொள்வதோடு மக்களையும் பரவசப்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கும் இசையால் அழகுபோர்த்திய கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவினருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.



இங்கே உள்ள இணைப்பை அழுத்தி வெற்றியாளர்களின் பாடல்களைக் கேட்கலாம்.
தமிழ்முரசம் நடாத்திய இளம் செல்லக்குயில் போட்டியின் வெற்றியாளர் ஜெய்ஸ்வகதி கிருஸ்ணசாமி – YouTube
தமிழ்முரசத்தின் செல்லக்குயில் போட்டியின் வெற்றியாளர் தாணுகி கோணேஸ் – YouTube
தமிழ்முரசம் நடாத்திய வானம்பாடிகள் போட்டியில் வெற்றிபெற்ற திவானி உதயகுமார் – YouTube