தமிழ்முரசத்தை முடக்க துடிக்கும் புல்லுருவிகள்!!

You are currently viewing தமிழ்முரசத்தை முடக்க துடிக்கும் புல்லுருவிகள்!!


நாம் ஏற்கனவே பல தடவைகள் அறிவித்திருக்கின்றோம் எமது பொதுநலச் செயற்பாடுகளுக்கு விரோதமாக செயற்படுவோரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோமென அந்த வகையில் தமிழ்முரசம் வானொலியின் செயற்பாட்டை முடக்குவதற்கு சிலர் திரைமறைவில் இருந்து செயற்படுவதை பல தடவைகள் ஆதாரமின்றி அறிந்திருக்கின்றோம்.

சிலவேளை திருந்துவார்கள் என்று நம்பியிருந்தோம் ஆனாலும் அவர்கள் நிறுத்துவதாக தெரியவில்லை ஆதலால் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இன்றைய நேரலையில் நாம் வன்முறையை தூண்டுவதாக முகநூல் நிர்வாகத்திற்கு அறிவித்தமை எமக்கு ஆதாரபூர்வமாக கிடைத்துள்ளது.
எமது வானொலியில் நீண்டகாலம் பணியாற்றி பின்பு ஓய்வு எடுக்க ச்செல்வதாக கடிதமெழுதி தந்துவிட்டு கீரைக்கடைக்கு எதிர்க்கடையை ஆரம்பித்த ஒருவரே இந்த இழிய செயலை செய்துள்ளார்.

இப்படியான இயலாத்தன்மை மிக்க செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் இல்லையேல் வெளிப்படையாக எல்லாவற்றையும் பொதுவெளியில் பேசவேண்டிய சூழல் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோம்.

அத்தோடு நீங்கள் எதிர் பார்த்ததுபோல் தமிழ்முரசம் தாழ்ந்துபோகவில்லை இன்னும் பல பாச்சல்களை தமிழினத்திற்காக செயலாற்றுவதற்கு தாண்டுமென்பதையும் உறுதியோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

-தமிழ்முரசம் வானொலி-

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
1 கருத்து
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments
Athithan
2 ஆண்டுகளுக்கு முன்பு

Dette er hårreisende. Jeg skjønner ikke intensjonen til Vijay Nathan med å rapportere inn dette. Dette er absolutt ikke bra for en mann som har egen radio kanal. Er det rart vi blir overtrampet av andre når vi har våre egne som oppfører seg som எட்டப்பன் பயல்கள்? Det er ganske så sykt oppførsel og mentalitet. Det sier jo litt om han og hans bakgrunn. Jeg trodde absolutt ikke at han kan synke så lavt. Det er lavmål.