தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு சிங்கள இனவெறியர் அறைகூவல்!

You are currently viewing தமிழ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு சிங்கள இனவெறியர் அறைகூவல்!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் இன்று பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அதில் பங்கேற்க அனைவரும் அணி திரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை கட்டுமான பணிகளை முன்னின்று செயற்படுத்திய வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை ,மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கல்கமுவ சாந்தபோதி தேரர் முகநூலில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக வெள்ளிக்கிழமை சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் புதன்கிழமை துரைராசா ரவிகரன் பிறிதொரு தேவைக்காக முல்லைத்தீவு காவல் நிலையம் சென்றபோது அவரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன் “எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெறும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை

பாராளுமன்றத்தில் வைத்து நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

குண்டர்களால் பௌத்த உரிமை நாசமாக்கப்படுகின்றது. அவற்றை வடக்குக்குச் சென்று பார்த்துவருமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பௌத்த உரிமை நாசமாக்கும் பிரிவினைவாத குண்டர்களுக்காக முன்னிலையாகுவதற்கு முன்னர் இரண்டொரு தடவைகள் சிந்தித்துப் பார்க்குமாறும் சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாங்கள் அனைவரும் நீதிமன்றத்தை மதிக்கிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் உயர் நீதிமன்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா அவருக்குப் பயந்து தானா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்

இலங்கையின் நீதித்துறை குறித்து வெளியிடப்பட்ட அவமானகரமான மற்றும் அருவருப்பான அறிக்கைகள் தொடர்பில் தானாக முன்வந்து ஜெனிவா சென்று கண்டித்ததாகவும் சரத் வீரசேகர அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments