நாட்டின் தற்போதைய சந்தர்பங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் தனது பயணத்தை மேற்கொண்டுள்ள அவரிடம்,எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்களை சமாளிப்பதற்காக ஜனாதிபதி கோட்டா கதைகூறுகின்றாரே தவிர,பொறுப்புள்ளவராக அவர் இதுவரை செயற்படவில்லை.எரிபொருள் இல்லை என்று குறிக்கொண்டு நாம் வீட்டிலேயே இருக்க முடியாது.
சைக்கிளில் திரிஞ்சு என்றாலும் எமது கடமைகளை நாம் செய்ய வேண்டும்.பத்து நாட்களில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் கூறியுள்ளார்.அதுவும் அவர் உறுதியாக கூறவில்லை.
நாட்டில் தற்போது நிலவும் இக்கட்டான நிலையில் கூட ,முஸ்லீம் தலைவர்கள் தமது மக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறந்த வர்த்தக நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்து,முஸ்லீம் மக்கள் மீது ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் ,ஒரு சேறு பூசும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகிறது.
மே 18 இன அழிப்பைத் தொடர்ந்தும் தமிழ் ,முஸ்லீம் மக்கள் மீது வன்முறைகள்,அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இது தவிர நாடு தற்போது காணப்படும் நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களை மறந்துள்ளது.முதலில் நாட்டை மீட்க வேண்டும் என்று சுமந்திரன் கூறுகின்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய,மேற்கு உலக நாடுகளின் ஆதரவோடு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமந்திரனை கொல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கூட இதுவரை விடுதலை செய்யப்படாத நிலையில் ,இவர்கள் எப்படி தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் நாட்டின்,நிலவரம் தொடர்பில் டுவிற்றலில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்,சட்ட ஒழுங்கு தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதை நாம் ஏற்கின்றோம் என்றார்.