கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பியவர், நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் (வயது 30) என்ற குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் சிறீலங்கா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.