தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் ஆப்கானிஸ்தானில் மூவர் பலி!

You are currently viewing தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் ஆப்கானிஸ்தானில் மூவர் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் 10 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான் கொடியை போராட்டக்காரர்களில் சிலர் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றினர்.

அப்போது அங்கு வந்த தலிபான்கள் போராட்டக்காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 -க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆப்கானிஸ்தான் தேசியக்கொடி அகற்றப்பட்டு தலிபான்களின் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என தலிபான்கள் உறுதியளித்திருந்தபோதும் இவ்வாறு செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டமை அவர்கள் பயங்கரவாத சித்தாந்தத்தை தொடர இருப்பதையே காட்டுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை

காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்கள் வசம் சென்று உள்ளதை அடுத்து அந்நாட்டில் இருந்து வெளியேற ஏராளமான ஒரு முடிவு செய்து காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காபூலில் இருந்து யாரும் நாட்டைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும் விமானநிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments