தலீபான்களிடம் அமெரிக்கா சரண் : ஈரான் கருத்து!

  • Post author:
You are currently viewing தலீபான்களிடம் அமெரிக்கா சரண் : ஈரான் கருத்து!

அமைதி ஒப்பந்தம் மூலம் தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டதாக ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-தலீபான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஜரிப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நுழைந்திருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் நுழைந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தினர். 19 ஆண்டுகால அவமானத்துக்கு பிறகு, தலீபான்களிடம் அமெரிக்கா சரண் அடைந்து விட்டது.

இருந்தாலும், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் செய்ததுபோல், ஆப்கானிஸ்தானிலும் பெரிய குழப்பத்தை உருவாக்கி விட்டுத்தான் அமெரிக்கா வெளியேறும். தலீபான்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள