தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனைப் பற்றிப் பேச ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றின் உரையாடலின் போது பேரினவாத சிங்கள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அதில் தலைவர் வே.பிரபாகரன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாகவும் யுத்த காலத்திற்கு முன் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரபாகரன் மக்களை அச்சுறுத்தியே வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
குறித்த விடயத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று (06) கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்த கருத்தாவது,
டக்ளஸ் தேவானந்தா கடந்த நாட்களின் முன் நாடாளுமன்றில் தலைவர் பிரபாகரன் போதைவஸ்து வியாபாரி எனவும் தற்பொழுது மகிந்த ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாகவும் பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்.
அத்துடன், தனது அற்பசொற்ப இலாபத்திற்காக இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் இடையேயான மோதலை உருவாக்குவதாகவும் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் அட்டை பண்ணைகளை அமைத்துப் படுமோசமான நிதிகளை அவரது முகவர்கள் ழூலமாக பெற்றுக்கொள்கிறார்.
அண்மையில் கூட அமைச்சரின் கட்சி பொறுப்பாளர் ஒருவர் பவானி என அழைக்கப்படுபவர் தனக்கு 2 இலட்சம் தாடிக்கு 3 இலட்சம் என்று லஞ்சம் கேட்கும் காணொளிகளும் சழூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எந்த அரசாங்கம் மாறினாலும் அந்த அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுபவர்தான் டக்ளஸ் எனவும் பல கருத்துக்களை ஜீவராஜா முன்வைத்துள்ளார்.