தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்!

You are currently viewing தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்!

முல்லைத்தீவில் அடை மழை – வீடுகள்,கடைகளுக்குள் வெள்ளம்! 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம் மழைபெய்து வருகின்றது இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெய்துவரும் மழையினால் மருதமடு குளம் நிரம்பி வான்பாய்கின்றது இதனால் மயில்குங்சன் குடியிருப்பு,பண்டியன் வெளி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் பல வயல் வெளிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வடிகாலமைப்புக்கள் சரியாக இல்லாத காரணத்தினால் நகரப்பகுதியில் உள்ள மக்களின் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் வணிக நிலையங்கள் சிலவற்றுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளன.

தொடர்ந்தும் மழை நீடிக்குமானால் மக்கள் இடம்பெயரவேண்டி வரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்

தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்! 1
தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்! 2
தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்! 3
தாயகப்பகுதிகளிலும் கனத்த மழையால் வெள்ளம்! 4

அச்சுவேலியில் அதிக மழை வீழ்ச்சி!

நேற்றுமுன்தினம் காலை-8.30 மணி முதல் நேற்று திங்கட்கிழமை காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி, அச்சுவேலியில் அதிகபட்சமாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில் வடமராட்சி அம்பனில் 53.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 38.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரப் பகுதியில் 37.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 35.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கோட்டையில் 27.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 27.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 25.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments