யாழ்ப்பாணம். நல்லூர், தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளின் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!
மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிப்பு நிகழ்வு இன்று காலை 11.00 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், யாழ்ப்பாணம். நல்லூர், தென்மராட்சி, வலிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 250இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் பங்கேற்றனர்.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு மாவீரர்களின் தாய்மார்களால் ஆரம்ப நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும், மாவீரரின் உறவுகளுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் நிறைவில் மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.செல்வராசா கஜேந்திரன் உரையாற்றியிருந்தார். மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்விற்கான பங்களிப்பினை பிரித்தானியா வாழ் தமிழர்கள் வழங்கியிருந்தனர்.




மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் அடம்பன் கூட்டுறவு மண்டபத்தில், 19.11.2026 வியாழன் அன்று காலை 10.30 மணியளவில் மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு 40 கிராமங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை, ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அழைத்து வந்து .
அடம்பன் பாடசாலை சந்தியில் இருந்து பொதுப்படம் தாங்கி நடை பவனியாக ஆரம்பித்து இந்து மத குருக்கள், முன்னாள் போராளிகள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக.
*பொதுச்சுடரினை:மாவீரர் நல்லதம்பியின் தந்தையார் திரு.யோ. கபிரியேல் அவர்கள் ஏற்றிவைத்தார்,
*பொதுப்படத்திற்கான மலர் மாலையினை : இரண்டு மாவீரர்களான ரூபிகா, மற்றும் பாண்டியன் அவர்களின் தாயார் திருமதி இ.டெய்சி அவர்களும். சூரியபுத்திரன், மற்றும் ரோபட் அவர்களும் அணிவித்தனர்.
*நினைவுச்சுடரினை : மாவீரர் கலைமகளின் தந்தையாரான திரு. ப.செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
*மலர் வணக்கத்தினை : மாவீரர் வளவனின் தாயார் ஆரம்பித்து வைத்தார்.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வினைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நினைவுரைகள் உணர்வு பூர்வமாக நிகழ்த்தப்பட்டது .
இதன் முடிவில் அழைக்கப்பட்ட பெற்றோர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
*அதனைத்தொடர்ந்து பெற்றோர்களுக்கு நினைவுப்பொருள் வழங்கியதுடன்.
*இறுதியாக நன்றியுரையினை மாவீரரின் சகோதரி திருமதி. கில்டா நிகழ்த்தினார்.
இத்துடன்
மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமான நிறைவுபெற்றது. இம் மதிப்பளிப்பிற்கான பங்களிப்பினை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் வழங்கியிருந்தனர்.











மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் திருக்கோவில் வெஸ்லி மெதடிஸ் மண்டபத்தில், 19.11.2026 வியாழன் அன்று காலை 9.30 மணியளவில் மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு பல கிராமங்களில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை, ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக.
*பொதுச்சுடர் மாவீரரின் மெற்றோரால் ஏற்றிவைக்கப்பட்டது.
*பொதுப்படத்திற்கான மலர் மாலையினை மாவீரர் பெற்றோர்கள் அணிவித்தனர்.
பல மாவீரர்களின் திருவுருவப் படங்களும் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு அந்த மாவீர்ர்களின் பெற்றோர் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்தனர்.
சுடரேற்றல் மற்றும் மலர் வணக்கத்தினை : மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அனைவரும் உணர்வோடு செய்ய, நிகழ்வில் பங்கெடுத்த அனைவரும் கண்ணீர் மல்க உணர்வோடு நினைவேந்தியிருந்தனர்.
உணர்வு பூர்வமாக நடந்த இந்நிகழ்வினைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பாக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அவர்களும் அம்மண்ணின் ஆசிரியர் ஒருவரும் நினைவுரைகளை உணர்வு பூர்வமாக நிகழ்த்தினர்.
இந்நிகழ்வின் நிறைவில் அழைக்கப்பட்ட பெற்றோர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் அம்பாறை மாவட்ட மாவீரரின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமான நிறைவுபெற்றது. இம் மதிப்பளிப்பிற்கான பங்களிப்பினை யேர்மன்வாழ் தமிழ்மக்கள் வழங்கியிருந்தனர்.












மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை, மதிப்பளிப்பு நிகழ்வு இன்று காலை பருத்தித்துறை சூரியமகால் மண்டபத்தில் நடைபெற்றது.
ஏற்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்பில், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கரவெட்டி, நெல்லியடி மற்றும் தொண்டமானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் பங்கேற்றனர்.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் வாத்திய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் பொதுப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு மாவீரர்களின் தாய்மார்களால் ஆரம்ப நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும், மாவீரரின் உறவுகளுடனான கலந்துரையாடல்களும் இடம்பெற்றதுடன், நிகழ்வின் நிறைவில் மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்னம் சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப்பரப்புச்செயலாளர் சட்டத்தரணி காண்டீபன், வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளர் நாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்விற்கு கனடா மண்வாசனை அமைப்பு பங்களிப்பினை வழங்கியிருந்தது. அனைவரது ஒத்துழைப்புடன் நடைபெற்ற இம்மதிப்பளிப்பு நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மடுப்பிரதேசத்தின் தட்சணாமருதமடு கிராமத்தில் இளைஞர்களின் பங்களிப்புடன் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் 16.11.2026 அன்று காலை 10.30 மணியளவில் மதிப்பளிப்பு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு முள்ளிக்குளம், இரணைஇலுப்பக்குளம், குஞ்சுக்குளம், மாதாகிராமம், தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான், பண்டிவிரிச்சான், பாலம்பிட்டி, தட்சணாமருதமடு கிராமங்களில் இருந்து 220 க்கு மேற்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை, ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். தட்சணாமருதமடு பாடசாலை சந்தியில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்து பொதுப்படம் தாங்கிய சிறார்கள், கத்தோலிக்க மற்றும் சைவமத குருக்கள், முன்னாள் போராளிகள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மண்டபத்திற்கு வரப்பட்டார்கள்.
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது.
* பொதுச்சுடரினை : மாவீரர் கோவிந்தனின் தாயார் திருமதி. தர்மலிங்கம் அமராவதி அவர்கள் ஏற்றிவைத்தார்,
* பொதுப்படத்திற்கான மலர் மாலையினை : மாவீரர் அறிவு அவர்களின் துணைவியாரும், மாவீரர் குரலமுதனின் சகோதரியும், முன்னாள் போராளியுமான திருமதி குறிஞ்சி அவர்கள் அணிவித்தார்.
* நினைவுச்சுடரினை கரும்புலி மாவீரர் வன்னிமன்னன் அவர்களின் தாயார் திருமதி. லூசியா ஜேந்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
* உணர்வு பூர்வமாக நடந்த இந்நிகழ்வினைத்தொடர்ந்து
* மாவீரர்கள் நினைவு சுமந்த நடனம் சிறார்களால் நிகழ்த்தப்பட்டது.
* அடுத்து நினைவு ஆசியுரையினை இந்து மத குருக்கள், பங்குததந்தை நிகழ்த்தினர்.
* அடுத்து மாவீரர் நினைவான கவிதையை ஆசிரியை நிகழ்த்தினார்.
* தொடர்ந்து மாணவர்களால் மாவீரர்கள் நினைவு நடனம் இடம்பெற்றது.
* இறுதியாக மாவீரர் பாலு அவர்களின் துணைவியார் திருமதி ஜேந்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
* முடிவில் அழைக்கப்பட்ட பெற்றோர்கள் அனைவருக்கும் சிறப்பான உணவு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு நினைவுப்பொருள் வழங்கியதுடன், மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வு பூர்வமான நிறைவுபெற்றது. இம்மதிப்பிற்கான பங்களிப்பினை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் வழங்கியிருந்தனர்.











மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு . மன்னார் நகர், மன்னார் மாவட்டம்.
மன்னார் மாவட்டம் மாவீரர் பெற்றோர் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, 21.11.2026 அன்று ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 இற்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரை, சிறப்பு பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர்.
மன்னார் நகரில் பேரெழுச்சியுடன் நடந்த இந்நிகழ்விற்கு, அதிவந்தனைக்குரிய மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானபிரகாசம் ஆண்டகை அவர்கள், சிறப்பாக வருகை தந்து, மாவீரர்களின் பெற்றோர்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று , மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமான ஆசியுரையினை வழங்கியிருந்தார்.
பொதுச்சுடரினை மாவீரர் வசீகரன் அவர்களின் தாயார் திருமதி. சி.அன்னரோஸ் சில்வா அவர்கள் ஏற்றிவைத்தார். பொதுப்படத்திற்கான மாலையினை மாவீரர் செந்தில் அவர்களின் சகோதரர் திரு.ஜெகநாதன் அவர்கள் அணிவித்தார்.
நினைவுச்சுடரினை மாவீரர் திருநிலா அவர்களின் தந்தையார் திரு. மருதநாயகம் அவர்கள் ஏற்றினார்.
மலர் வணக்கத்தினை இரண்டு மாவீரர்களான எள்ளாளன், சுதாகரன் அவர்களின் தாயார் திருமதி .யசிந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார் .
தொடர்ந்து வருகைதந்த அனைவரும் சுடரேற்றி , மலர் வணக்கம் செலுத்தும் உணர்வுபூர்வமான நிகழ்வு இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் நினைவு சுமந்த உரைகள்.கவிதைகள், நடனங்கள் உணர்வு மிக்கதாக இடம்பெற்றன.
இத்துடன் பெற்றோர்களுக்கு தேனீர் ,சிற்றுண்டி,விசேட உணவு, மற்றும் நினைவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவீரரின் சகோதரியினால் நன்றியுரையுடன் எழுச்சிபூர்வமான இந்நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வாற்கான பங்களிப்பினை டென்மார்க் வாழ் தமிழ்மக்களால் வழங்கியிருந்தனர்.





















