தாய்லாந்தில் மன்னர் குடும்பத்து வாகனங்களை முந்தி செல்ல முயன்ற பெண்: தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு!

You are currently viewing தாய்லாந்தில் மன்னர் குடும்பத்து வாகனங்களை முந்தி செல்ல முயன்ற பெண்: தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு!

தாய்லாந்தில் அரச குடும்பத்து வாகனங்களை முந்திச் செல்ல முயன்றதாக கூறி தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில் மன்னரின் சகோதரி இளவரசி சிரிந்தோர்ன் என்பவரின் வாகனத்தை கடந்து செல்லவிடாமல் இடையூறு செய்ததாகவும் அதன் பாதையில் குறுக்கிட முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இருவர் மீதும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதிகாரிகளுக்கு இடையூறு அளித்தது உட்பட பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் கடவுக்கு நிகரான நபராக கருதப்படுகிறார் அங்குள்ள மன்னர் Maha Vajiralongkorn. இதனாலையே, அவரை பாதுகாக்கும் பொருட்டு உலகின் மிகக் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படுகிறது.

ஆனால் 2020ல் இருந்தே அங்குள்ள இளையோர் மத்தியில் மன்னருக்கான செல்வாக்கு சரிவடைந்துள்ளதுடன், மன்னருக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

22 வயதான Tantawan ஏற்கனவே கடுமையான சட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். அத்துடன் மன்னர் தொடர்பான சட்டத்தை ஒழிக்க அரசியல் கட்சிகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு 50 நாட்கள் மற்றொரு ஆர்வலருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

2020க்கு பின்னர் சுமார் 250 பேர்கள் தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்ததாக கூறி வழக்கை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments