தாய்வானை சுற்றி வளைக்கும் சீனா! இராணுவ ஒத்திகை!!

You are currently viewing தாய்வானை சுற்றி வளைக்கும் சீனா! இராணுவ ஒத்திகை!!

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்க காங்கிரஸ் தலைவரான நான்ஸி பெலோசி அம்மையார், தாய்வானின் தலைநகரில் தரையிறங்கியுள்ளதையடுத்து, தாய்வானை சுற்றி வளைத்து தனது இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, சீனா எந்நேரமும் தாய்வான் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தாய்வானின் பொதுமக்கள் பாதுகாப்புக்கான மறைவிடங்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிதாக மறைவிடங்களும் அமைக்கப்பட்டு வருவதோடு, சீன இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளும் தாய்வான் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1949 ஆம் ஆண்டில், சீனாவிடமிருந்து பிரிந்த தாய்வான், எப்போதும் சீனாவின் ஒரு அங்கமே என தெரிவித்துள்ள சீன அரசு, “ஒரே சீனா” என்ற கொள்கையின் அடிப்படையில் தாய்வானை மீண்டும் சீனாவுடன் இணைப்பதே சீனாவுக்கான வரலாற்றுக்கடமை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணிவரும் தாய்வான், சீனாவின் ஆதிக்கத்துக்குள் செல்ல மறுத்து வருவதோடு, தான் ஒரு தனிநாடாகவே இயங்க விரும்புவதாகவே தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளது. தாய்வானுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை முன்னிறுத்தி, சீனாவுடன் தொடர்ச்சியாக அமெரிக்கா முரண்பாடுகளை வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க காங்கிரசின் தலைவராகவிருக்கும் நான்ஸி பெலோசி அம்மையார் தாய்வானுக்கு வருகை தருவதாக அறிவிப்பு வெளியாகிய உடனேயே அதை எதிர்த்த சீனா, அம்மையாரின் வருகையானது, சீனாவை அனாவசியமாக கோபப்படுத்தும் எனவும், தாய்வானுக்கான அவரது வருகை உடனடியான எதிர்விளைவுகளை ஏற்படுத்துமென முன்னதாகவே அறிவித்திருந்த நிலையில், பெலோசி அம்மையார் தாய்வான் தலைநகர் தைப்பேய் வந்தடைந்த ஒருசில மணிநேரங்களில், தாய்வானை சுற்றி வளைத்து இராணுவ ஒத்திகை நடத்தப்படுமென சீன அறிவித்துள்ளமையானது பெரும் அதிர்வலைகளை கிளப்பி விட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments