வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக தாளையடி கடற்கரை சென்றுள்ளார். கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் இந்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து மருதங்கேணி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பு:
வடமராட்சிகிழக்கிற்கு (மணலக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் )வரையான கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலாவரும் பயணிகளே குறிப்பாக மாரிகாலம் அதுவும் கார்த்திகை,மார்கழி.தை மாதங்களில் கடலில் இறங்கி குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் இந்தக்காலங்களில் (மாதங்களில்) கடலில் சுழிவாய் நீர் ஓட்டம் ஒன்று வரும் அதாவது தரையில் சுழிக்காற்று வீசுவதுபோல் கடலில் நீருக்கு அடியில் இப்படியான நீரோட்டம் ஒன்று இடம்பெறுகின்றது அதற்குள் அகப்பட்டால் உயிர்தப்பிவருவது மிகவும் கடினம் எந்தவிதமான நீச்சல்காறரும் தப்பிவருவது மிகக்கடினம் மனோபலம் உள்ளவர்கள் ஒருசிலர் மீண்டு வந்திருக்கின்றார்கள் ஆகவே இப்படியான காலங்களில் பெருங்கடலில் நீராடுவதை தவிருங்கள்.






