
யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகினர். இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.