முகநூலில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு மில்லியன் போலிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மூடப்படுகின்றன என இன்று சனிக்கிழமை பிற்பகல் மியூனிக் (München) பாதுகாப்பு மாநாட்டில் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தெரிவித்துள்ளார்.
மேலும் சோம் தளத்தில்(SoME-plattform) போலி கணக்குகள் எவ்வாறு வெளிவந்துள்ளன என்பது அறியப்பட்ட ஒன்றாகும் என்றும், அதேபோல் கொரோனா தொற்றுநோய்களின் போது தவறான தகவல்கள் மற்றும் பிரச்சாரங்களை பரப்புவது முதல் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவது வரை எல்லாவற்றிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற குற்றச்செயல்கள் முகநூல் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன (மிக சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது போல்) என்றும் கூறியுள்ளார்.