தியாகதீபத்தின் நினைவிடத்தை அகற்றக்கோருவதற்கு வன்மையான கண்டனம்!

You are currently viewing தியாகதீபத்தின் நினைவிடத்தை அகற்றக்கோருவதற்கு வன்மையான கண்டனம்!

தியாக தீபம் அவர்களின் நினைவிடத்தை அகற்றுமாறு யாழ் மாவட்டப் பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

தியாக தீபம் அவர்களின் நினைவிடம் சட்டவிரோதக் கட்டடம் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான குற்றச்சாட்டாகும்.
தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளையும், உணர்வுகளையும், கூட்டாக நினைவேந்தல் செய்யும் அடிப்படை உரிமையையும் ஒடுக்கி, மௌனிக்கச் செய்யும் நோக்கிலேயே இத்தகைய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகின்றோம்.
அனுர அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை தொடர்பான அதன் அணுகுமுறை குறித்த ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றன.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காத வகையிலான இத்தகைய பொலிஸ் நடவடிக்கைகள் தொடர்வது, பொலிஸ் கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறை இன்னமும் நீடிப்பதாகவே உணரச் செய்கின்றது.
தியாக தீபம் அவர்களின் நினைவு என்பது வெறும் நினைவிடம் சார்ந்த விடயமல்ல; அது தமிழ் மக்களின் வரலாறு, உணர்வு மற்றும் நினைவேந்தல் உரிமையோடு தொடர்புடையது. அந்த உரிமையை எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது பாதுகாப்பது எமது ஜனநாயகக் கடமையாகும்.
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மதித்து, குறித்த அறிவித்தலை உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

-தமிழ்முரசம் வானொலி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply