தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவெழுச்சிக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்நேற்று வெழுச்சியுடன் ஆரம்பமாகி இன்று 7ம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் பன்னிரு நாட்கள் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்ட தியாக தீபத்திற்கு, மக்கள் பெரும் உணர்வெழுச்சியோடு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாக, தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இரத்ததானம் (21.09.2025) இன்று இடம்பெற்றுவருகிறது.
மாலை 1 மணிவரை தொடரும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இப்போராட்டத்திலும் இளைஞர்கள் ஆர்வத்தோடு இணைந்துள்ளனர்

நேற்றும் இன்றும் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியும் நடைபெற்று வருகின்றது. தியாக தீபம் திலீபன் நினைவாக, நல்லூரில் நடைபெற்றுவரும் ஓவியப்போட்டி.
போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் (21.09.2025) இன்று மாலை 4 மணிவரை விரும்பிய நேரத்தில் பங்குபற்ற முடியும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் நினைவாக நடைபெறும் ஓவியப்போட்டி #20092025 #TNPF
இதேபோன்று பொத்துவிலில் ஆரம்பமாகிய நினைவூர்திப்பயணம் 7ம் நாளான இன்று தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கி முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதியூடாக கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் தியாக தீபத்திற்கு உணர்வெழுச்யோடு வணக்கம் செலுத்திவருகிறார்கள்.







